Homeசெய்திகள்சினிமா33 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ரஜினியுடன் ஜோடி சேரும் பிரபல நடிகை!

33 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ரஜினியுடன் ஜோடி சேரும் பிரபல நடிகை!

-

நடிகர் ரஜினி ஜெயிலர் படத்தின் இமாலய வெற்றிக்குப் பிறகு டிஜே ஞானவேல் இயக்கி வரும் வேட்டையன் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் 2024 அக்டோபர் மாதத்தில் வெளியாக இருக்கிறது. 33 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ரஜினியுடன் ஜோடி சேரும் பிரபல நடிகை!இதைத்தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிக்க உள்ளார். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க அனிருத் இதற்கு இசை அமைக்கிறார். தற்காலிகமாக தலைவர் 171 என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ள இந்த படத்தின் டீசர் வருகின்ற ஏப்ரல் 22 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இது சம்பந்தமான அறிவிப்பு வெளியானதில் இருந்தே ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. அதேசமயம் படம் தொடர்பான அடுத்தடுத்த அப்டேட்டுகளும் அவ்வப்போது வெளிவந்த வண்ணம் உள்ளன. அந்த வகையில் இந்த படத்தில் சாண்டி மாஸ்டர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க கமிட் ஆகியுள்ளார் என்று தகவல் வெளியானது. அதைத்தொடர்ந்து பிரபல பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் இதன் கூடுதல் தகவலாக நடிகை ஷோபனா இந்த படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடிக்க இருக்கிறார் என்று புதிய அப்டேட் கிடைத்துள்ளது. ஏற்கனவே ஷோபனா தளபதி படத்தில் ரஜினியுடன் இணைந்து நடித்திருந்தார். 33 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ரஜினியுடன் ஜோடி சேரும் பிரபல நடிகை!தளபதி படத்தில் இடம்பெற்ற சுந்தரி நீயும் சுந்தரன் நானும் என்னும் பாடல் இன்று வரையிலும் பலரின் பேவரைட் பாடலாக இருக்கிறது. இந்நிலையில் 33 வருடங்களுக்குப் பிறகு இந்த ஜோடி தலைவர் 171 படத்தில் இணைய இருப்பது ரசிகர்களுக்கு மிகுந்த உற்சாகத்தை தந்துள்ளது. எனவே இது தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

MUST READ