நடிகர் சூர்யா தற்போது தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகராக வலம் வருபவர். இவர் நடிகை ஜோதிகாவை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் இருவரும் நட்சத்திர தம்பதிகளாக வலம் வருகின்றனர். இவர்கள் இருவரும் இணைந்து உயிரிலே கலந்தது, திருமலை, காக்க காக்க, பேரழகன், சில்லுனு ஒரு காதல் போன்ற பல படங்களில் இணைந்து நடித்துள்ளனர். இது ஒரு பக்கம் இருக்க திருமணத்திற்கு பின் இடைவெளி எடுத்துக்கொண்ட நடிகை ஜோதிகா மீண்டும் படங்களில் நடிக்க தொடங்கிவிட்டார். அதன்படி 36 வயதினிலே, காற்றின் மொழி போன்ற படங்களில் நடித்து வந்த ஜோதிகா தற்போது மலையாளம், இந்தி உள்ளிட்ட மொழி படங்களிலும் கவனம் செலுத்தி வருகிறார். அதேசமயம் நடிகை ஜோதிகா சமீபகாலமாக தீவிர உடற்பயிற்சியிலும் ஈடுபட்டு வருகிறார். அதன்படி ஜோதிகா ஒர்க் அவுட் செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வந்தது. ஜோதிகா தன்னுடைய அடுத்த படத்திற்காக தன்னை மெருகேற்றி வருகிறார் என்று பலரும் ஜோதிகா உடற்பயிற்சி செய்யும் வீடியோவை கண்டு பலரும் பிரம்மிப்படைந்தனர்.
இந்நிலையில் ஜோதிகா மிகத் தீவிரமாக எந்த படத்திற்காக ஒர்க் அவுட் செய்து வருகிறார் என்று ரசிகர்கள் பலரும் கேள்வி எழுப்பி வந்த நிலையில் நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் சூர்யா, ஜோதிகா இருவரும் இணைந்து நடிக்க உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. அதன்படி சூர்யா, ஜோதிகா நடிக்கும் புதிய படத்தை பெங்களூர் டேஸ் படத்தின் இயக்குனர் அஞ்சலி மேனன் இயக்க வாய்ப்புள்ளதாகவும் அல்லது சில்லு கருப்பட்டி பட இயக்குனர் ஹலிதா சமீம் இயக்க இருப்பதாகவும் சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும் சூர்யா, ஜோதிகா இருவரும் இணைந்து நடிக்க உள்ள தகவல் ரசிகர்களை மிகுந்த உற்சாகத்தில் ஆழ்த்தியது மட்டுமல்லாமல் எதிர்பார்ப்பையும் தூண்டி உள்ளது.
- Advertisement -