மீண்டும் இணையும் மருது கூட்டணி… விஷாலை இயக்கும் முத்தையா….
மருது பட கூட்டணி மீண்டும் இணைய உள்ளது. விஷாலை வைத்து முத்தையா மீண்டும் ஒரு புதிய படம் இயக்குவதாக கூறப்படுகிறது.
தமிழில் கமர்ஷியல், காதல் என பல படங்கள் கலக்கலாக வந்தாலும், கிராமத்து பின்னணியில் திரைப்படங்களை உருவாக்கி சினிமாவில் தனக்கென தனி இடம் பிடித்தவர் இயக்குநர் முத்தையா. மண் மனம் மாறாமல் படம் இயக்கும் இயக்குநர்களில் இவர் முக்கியமானவர். குட்டிப்புலி திரைப்படம் தமிழ் சினிமாவில் அறிமுகமான முத்தையா, அடுத்து, கார்த்தியை வைத்து கொம்பன், விஷாலை வைத்து மருது, சசிகுமாரை வைத்து கொடி வீரன், விக்ரம் பிரபுவுடன் புலிக்குத்தி பாண்டி ஆகிய படங்களை இயக்கி இருக்கிறார்.
முத்தையா இயக்கத்தில் இறுதியாக கார்த்தி நடித்த விருமன் படம் வெளியானது. இப்படத்தின் மூலம் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் அறிமுகமானார். இதில் விஷால் நடிப்பில் கடந்த 2016-ம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் மருது. இதில் விஷாலுக்கு ஜோடியாக ஸ்ரீ திவ்யா நடித்திருந்தார். கிராமத்து கதைக்களத்தில் வெளியான இத்திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. படத்தில் இடம்பெற்ற அனைத்து பாடல்களும் ஹிட் அடித்தன. படத்திற்கு டி.இமான் இசை அமைத்திருந்தார்.
இந்நிலையில், மீண்டும் மருது பட கூட்டணி இணைய உள்ளது. அதன்படி, நடிகர் விஷாலை முத்தையா மீண்டும் இயக்குகிறார். விஷால் நடிப்பில் அண்மையில் ரத்னம் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி இருக்கிறது. அடுத்ததாக துப்பறிவாளன் 2 படத்தில் விஷால் நடித்து வருகிறார். இதன் பிறகு முத்தையாவுடன் புதிய படத்தில் விஷால் இணைய இருக்கிறார். இப்படத்தை 5ஸ்டார் கிரியேசன்ஸ் நிறுவனம் தயாரிப்பதாக தெரிகிறது.