ஹரி இயக்கும் புதிய படம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
இயக்குனர் ஹரி தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர். இவருடைய படங்கள் பெரும்பாலும் ஆக்ஷன் காட்சிகள் நிறைந்து காணப்படும். இவர் கடந்த 2002 ஆம் ஆண்டு பிரசாந்த் நடிப்பில் வெளியான தமிழ் என்ற திரைப்படத்தை இயக்கியிருந்தார். அதைத்தொடர்ந்து விக்ரம் நடிப்பில் சாமி திரைப்படத்தை இயக்கினார். இந்த படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பு பெற்றது. அதைத் தொடர்ந்து சரத்குமார் நடிப்பில் ஐயா, சூர்யா நடிப்பில் ஆறு, தனுஷ் நடிப்பில் வேங்கை, விஷால் நடிப்பில் தாமிரபரணி, மீண்டும் சூர்யா நடிப்பில் சிங்கம் போன்ற பல வெற்றி படங்களை இயக்கியுள்ளார். இவ்வாறு பல கமர்சியல்
வெற்றி படங்களை தந்த ஹரி இயக்கிய சாமி 2, சிங்கம் 2, சிங்கம் 3 போன்ற படங்கள் எதிர்பார்த்த அளவில் வெற்றியை தரவில்லை. கடைசியாக இவர் 2021 இல் அருண் விஜய் நடிப்பில் யானை திரைப்படத்தை இயக்கியிருந்தார். இதைத் தொடர்ந்து விஷால் நடிப்பில் ரத்னம் திரைப்படத்தை இயக்கியுள்ளார் ஹரி. விஷால், பிரியா பவானி சங்கர், கௌதம் மேனன், சமுத்திரக்கனி உள்ளிட்டோரின் நடிப்பில் உருவாகி இருக்கும் ரத்னம் திரைப்படம் வருகின்ற ஏப்ரல் 26ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக இருக்கிறது. இதை தொடர்ந்து ஹரி இயக்கும் புதிய படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி ஹரி இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. மேலும் படத்தில் கதாநாயகனாக நடிக்க போவது யார் என்பது குறித்த தகவல் இனிவரும் நாட்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.