Homeசெய்திகள்சினிமாமீண்டும் இணையும் ஜவான் கூட்டணி... ஷாருக்கான் படத்திற்கு அனிருத் இசையமைப்பு...

மீண்டும் இணையும் ஜவான் கூட்டணி… ஷாருக்கான் படத்திற்கு அனிருத் இசையமைப்பு…

-

ஜவான் திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு ஷாருக்கான் நடிக்கும் புதிய படத்திற்கு அனிருத் இசை அமைக்கவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

கடந்த ஆண்டு ஷாருக்கான் நடிப்பில் வெளியாகி, பெரும் வரவேற்பை பெற்ற திரைப்படம் ஜவான். பிரபல கோலிவுட் இயக்குநர் அட்லீ, இப்படத்தை இயக்கி பாலிவுட்டுக்கும் அறிமுகமானார். படத்தில் ஷாருக்கானுடன் இணைந்து, நயன்தாரா, விஜய் சேதுபதி, தீபிகா படுகோனே, சஞ்சய் தத் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இந்தி,தமிழ், தெலுங்கு என மூன்று மொழிகளில் வெளியான இப்படத்திற்கு அனிருத் இசை அமைத்திருந்தார்.

மிகப்பெரிய வரவேற்பு பெற்ற இப்படம் ஒவ்வொரு நாளும் வசூல் சாதனையை படைத்து வந்தது. உலகம் முழுவதும் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட திரையரங்குகளிலும் குறிப்பாக தமிழகத்தில் 400கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியான இப்படம் முதல் நாளிலிருந்து உலகம் முழுவதும் வசூல் வேட்டையை நடத்தியது. உலகம் முழுவதும் சுமார் ஆயிரத்து 200 கோடிக்கு மேல் வசூலித்த இத்திரைப்படம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்திலும் வெளியானது. ஓடிடி தளத்தில் அதிகம் பேரால் பார்க்கப்பட்ட திரைப்படம் என்ற சாதனையை ஜவான் படைத்தது.

இந்நிலையில், ஜவான் படத்தின் கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது. அதன்படி, ஷாருக்கான் நடிக்கும் புதிய படத்திற்கு, அனிருத் இசை அமைக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்திற்கு கிங் என்று தலைப்பு வைக்கப்பட உள்ளது. படத்தில் ஷாருக்கானுடன் இணைந்து அவரது மகள் சுஹானா கானும் நடிக்கிறார். இத்திரைப்படத்தை, சுஜோய் கோஷ் இயக்குகிறார்.

MUST READ