Homeசெய்திகள்சினிமா80 கோடி போட்டு படம் எடுத்தாச்சு, ஆனா கைக்கு வந்தது... பெரும் தோல்வியைத் தழுவிய ஏஜென்ட்!

80 கோடி போட்டு படம் எடுத்தாச்சு, ஆனா கைக்கு வந்தது… பெரும் தோல்வியைத் தழுவிய ஏஜென்ட்!

-

- Advertisement -

அகில் அக்கினேனி நடிப்பில் வெளியாகியுள்ள ஏஜென்ட் திரைப்படம் பெரும் தோல்வியை சந்தித்துள்ளது.

பிரபல தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவின் மகன் அகில் அக்கினேனி நடிப்பில் ஏஜென்ட் என்ற திரைப்படம் வெளியாகியுள்ளது. இந்தப் படத்தில் நடிகர் மம்முட்டியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இந்தப் படம் நீண்ட நாட்களாக உருவாகி வந்தது. இந்த படத்திற்காக அகில் அக்கினேனி கடின பயிற்சிகள் மேற்கொண்டு சிக்ஸ் பேக் வைத்துக்கொண்டு போஸ்டர்களில் மாஸ் காட்டினார்.

படம் பெரும் பொருட்செலவில் உருவாகி வந்ததால் படத்திற்கும் தெலுங்கு சினிமாவில் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வந்தது. இந்நிலையில் ஏஜென்ட் படம் மக்கள் வரவேற்பைப் பெற தவறியுள்ளது. படம் 80 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டது. ஆனால் படம் வெளியாகி நான்கு நாட்களில் வெறும் 10 கோடி மட்டுமே வசூல் செய்துள்ளது. இதனால் படம் பெரும் தோல்வியடைந்துள்ளதாக தெரிகிறது.

பெரும் பொருட்செலவில் எடுக்கப்படும் படங்கள் பெரும்பாலானவை தோல்வியைச் சந்தித்து வருகின்றன. இதனால் பல தயாரிப்பளார்களும் நல்ல கதையம்சம் கொண்ட சிறிய பட்ஜெட் படங்களை நோக்கி நகர்ந்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

MUST READ