Homeசெய்திகள்சினிமாமீண்டும் இணையும் 'ஐரா' கூட்டணி...... நயன்தாராவின் அடுத்த படம் ரெடி!

மீண்டும் இணையும் ‘ஐரா’ கூட்டணி…… நயன்தாராவின் அடுத்த படம் ரெடி!

-

ஐரா பட கூட்டணி மீண்டும் இணைய போவதாக தகவல் வெளியாகி உள்ளது.மீண்டும் இணையும் 'ஐரா' கூட்டணி...... நயன்தாராவின் அடுத்த படம் ரெடி!

நயன்தாரா தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக வலம் வருபவர். இவர் தமிழ் மொழியில் மட்டுமல்லாமல் மலையாளம், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழி படங்களிலும் பணியாற்றி ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார். இவர் தற்போது டாக்ஸிக், மண்ணாங்கட்டி, டெஸ்ட் போன்ற பல படங்களை கைவசம் வைத்துள்ளார். அதேசமயம் நடிகர் கவின் உடன் இணைந்து புதிய படம் ஒன்றிலும் நடிக்க உள்ளார் நயன்தாரா. இதற்கிடையில் நயன்தாரா மூக்குத்தி அம்மன் 2 திரைப்படத்திலும் நடிக்க போவதாக அறிவிப்பு வெளியானது. இவ்வாறு பிசியான நடிகையாக வலம் வரும் நயன்தாரா அடுத்ததாக புதிய படம் ஒன்றிலும் நடிப்பதற்கு கமிட் ஆகியுள்ளார். அதாவது நயன்தாரா கடந்த 2019 ஆம் ஆண்டு கே எம் சர்ஜுன் இயக்கத்தில் ஐரா எனும் திரைப்படத்தில் நடித்திருந்தார். இதில் நயன்தாரா இரட்டை வேடங்களில் நடிக்க அவருடன் இணைந்து கலையரசன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.மீண்டும் இணையும் 'ஐரா' கூட்டணி...... நயன்தாராவின் அடுத்த படம் ரெடி! தற்போது சிறிய இடைவெளிக்குப் பிறகு மீண்டும் இவர்களின் கூட்டணி புதிய படம் ஒன்றில் இணைய உள்ளது. இந்த படத்தை பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கப் போவதாகவும் படத்தின் கதையை பரத்வாஜ் ரங்கன் எழுதுகிறார் எனவும் தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் படம் தொடர்பான அடுத்தடுத்து அப்டேட்டுகள் இனிவரும் நாட்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

MUST READ