நடிகை ஐஸ்வர்யா ராய் கடந்த 1997 இல் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான இருவர் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர். அதன்பிறகு ஜீன்ஸ் படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார். அதற்கு முன்னதாக 1994ல் உலக அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். தொடர்ந்து தமிழ், தெலுங்கு, இந்தி மொழிப் படங்களில் நடித்து வந்த இவர் அபிஷேக் பச்சனை மணமுடித்தார். திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து பிசியாக நடித்து வரும் ஐஸ்வர்யா ராய் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நந்தினி என்ற கதாபாத்திரத்தில் நடித்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார். இந்நிலையில் நடிகை ஐஸ்வர்யா ராய் சமீபத்தில் மும்பை விமான நிலையத்திற்கு தனது மகளுடன் காரில் வந்து இறங்கிய நிலையில் அவரது கையில் கட்டு போடப்பட்டிருந்தது.
இதை கண்ட ரசிகர்கள் அதிர்ச்சியடைந்து ஐஸ்வர்யா ராய் கையில் என்ன பிரச்சனை? அவர் மீண்டு வர வேண்டும் என சமூக வலைதளங்களில் #AishwaryaRaiBachchan என்ற ஹாஷ் டேகை ட்ரெண்ட் செய்து வந்தனர். அதன் பிறகு ஐஸ்வர்யா ராயின் கையில் லேசான காயம் மட்டுமே பயப்படும் அளவுக்கு எதுவும் இல்லை என்று நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்தது. அதை தொடர்ந்து பிரான்ஸ் நாட்டில் நடைபெறும் 77ஆவது கேன்ஸ் திரைப்பட விழாவில் கோலிவுட் முதல் பாலிவுட் வரை திரைப்படங்கள் பலரும் கலந்து கொள்ளும் நிலையில் ஐஸ்வர்யா ராயும் அந்நிகழ்வில் கலந்து கொண்டுள்ளார். வருடந்தோறும் நடைபெறும் கேன்ஸ் திரைப்பட விழாவில் சிவப்பு கம்பளம் நிகழ்வில் ஐஸ்வர்யா ராய் பிரத்தியேக உடைய அணிந்து நடை போடுவார்.
இந்த வருடம் (2024) மாவுக்கட்டுடன் அவர் நடை போடுவதைக் கண்ட அவரது ரசிகர்கள் தனக்கு விபத்து ஏற்பட்டதையும் பொருட்படுத்தாமல் விழாவில் பங்கேற்றது குறித்து ஐஸ்வர்யா ராயை பாராட்டி வருகின்றனர்.
- Advertisement -