Homeசெய்திகள்சினிமாவிவாகரத்து வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த ஐஸ்வர்யா ராய் பச்சன்!

விவாகரத்து வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த ஐஸ்வர்யா ராய் பச்சன்!

-

நடிகை ஐஸ்வர்யா ராய் பச்சன் தனது விவாகரத்து குறித்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.விவாகரத்து வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த ஐஸ்வர்யா ராய் பச்சன்!

தென்னிந்திய திரை உலகில் பிரபல நடிகையாக வலம் வருபவர் ஐஸ்வர்யா ராய். இவர் கடந்த 1994 இல் உலக அழகி என்ற பட்டத்தை பெற்றவர். இவருக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள். அந்த வகையில் இவர் தமிழ், இந்தி, ஆங்கிலம் உள்ளிட்ட பல மொழிகளில் நடித்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளார். கடைசியாக இவர் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நடித்திருந்தார். அதில் இவர் நடித்திருந்த நந்தினி என்ற கதாபாத்திரம் பெரிய அளவில் பேசப்பட்டது. இதற்கிடையில் இவர் கடந்த 2007 ஆம் ஆண்டு நடிகர் அபிஷேக் பச்சனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். விவாகரத்து வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த ஐஸ்வர்யா ராய் பச்சன்!இவர்கள் இருவருக்கும் ஆராத்யா என்ற மகள் இருக்கிறார். கிட்டத்தட்ட 17 ஆண்டுகளாக இருவரும் இணைந்து தங்களின் திருமண வாழ்க்கையை மிகவும் சந்தோஷமாக வாழ்ந்து வருகின்றனர். இருப்பினும் கடந்த சில மாதங்களாக அபிஷேக் பச்சன் மற்றும் ஐஸ்வர்யா ராய் ஆகிய இருவருக்கும் இடையில் பிரிவு ஏற்பட்டதுள்ளதாகவும் இருவரும் விரைவில் விவாகரத்து இருப்பதாகவும் சமூக வலைதளங்களில் செய்திகள் பரவி வருகிறது. அதுமட்டுமில்லாமல் விவாகரத்து தொடர்பான பதிவுகளுக்கு தனது ஆதரவை தெரிவித்து வருகிறார் அபிஷேக் பச்சன். மேலும் ஐஸ்வர்யா ராயும் தனது பெயரிலிருந்த பச்சன் என்ற பெயரை நீக்கியுள்ளார். விவாகரத்து வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த ஐஸ்வர்யா ராய் பச்சன்!இதனால் அபிஷேக் பச்சன் – ஐஸ்வர்யா ராய் இருவரும் பிரிந்து வாழ்வதாக பல தகவல்களை சமூக வலைதளங்களில் பரப்பி வந்தனர். இந்நிலையில் தான் மும்பையில் நடைபெற்ற பிரம்மாண்ட விருந்து நிகழ்ச்சி ஒன்றை அபிஷேக் பச்சன் – ஐஸ்வர்யா ராய் ஆகிய இருவரும் தங்களின் குடும்பத்துடன் கலந்து கொண்டு புகைப்படங்கள் எடுத்து மகிழ்ந்துள்ளனர். இருவருமே கருப்பு நிற உடையில் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் ஐஸ்வர்யா ராய் – அபிஷேக் பச்சன் ஆகிய இருவரும் தங்களின் விவாகரத்து குறித்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து இருக்கிறார்கள்.

MUST READ