Homeசெய்திகள்சினிமாமலையாளத்தில் என்ட்ரி கொடுக்கும் ஐஸ்வர்யா ராய்!

மலையாளத்தில் என்ட்ரி கொடுக்கும் ஐஸ்வர்யா ராய்!

-

- Advertisement -

நடிகை ஐஸ்வர்யா ராய் மலையாளத்தில் என்ட்ரி கொடுக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.

முன்னாள் உலக அழகியான நடிகை ஐஸ்வர்யா ராய், பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நந்தினி என்னும் கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்து அனைத்து ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்துள்ளார்.

இவர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் பல்வேறு படங்களில் நடித்து வருகிறார். இவ்வாறு பிஸியாக இருக்கும் பிரபல நடிகையான இவர், தற்போது முதன்முறையாக மலையாளத்தில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

பிரபல மலையாள நடிகர் திலீப், ப்ரணிதா சுபாஷ், ஷைன் டாம் சாக்கோ உள்ளிட்டோரின் நடிப்பில் புதிய படம் உருவாகிறது. சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியுள்ளது.

திலீபின் 148 ஆவது படமான இந்தப் படத்தில் ஐஸ்வர்யா ராய் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. விரைவில் இது குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

MUST READ