Homeசெய்திகள்சினிமாஎன்னையும் அப்படி செய்தார்கள்..... கசப்பான அனுபவம் குறித்து ஐஸ்வர்யா ராய்!

என்னையும் அப்படி செய்தார்கள்….. கசப்பான அனுபவம் குறித்து ஐஸ்வர்யா ராய்!

-

- Advertisement -
kadalkanni

தென்னிந்திய திரை உலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை ஐஸ்வர்யா ராய். இவர் கடந்த 1997இல் மணிரத்னம் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியான இருவர் என்ற திரைப்படத்தின் மூலம் திரைத் துறையில் நுழைந்தவர். என்னையும் அப்படி செய்தார்கள்..... கசப்பான அனுபவம் குறித்து ஐஸ்வர்யா ராய்!அதைத் தொடர்ந்து பிரசாந்தின் ஜீன்ஸ், அஜித்தின் கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் ஆகிய வெற்றி படங்களில் நடித்துள்ள இவர் இந்தி, தெலுங்கு உள்ளிட்ட மொழி படங்களிலும் நடித்து பெயர் பெற்றுள்ளார். அந்த வகையில் இவர் ரஜினி, விக்ரம், மம்மூட்டி உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து பணியாற்றி இருக்கிறார். கடைசியாக இவர் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நந்தினி என்ற கதாபாத்திரத்தில் நடித்து அனைத்து தரப்பு ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தார். இந்த படத்தில் இவருடைய கதாபாத்திரம் மிகப்பெரிய அளவில் பேசப்பட்டது. இதற்கிடையில் ஐஸ்வர்யா ராய், கடந்த 2007 இல் அபிஷேக் பச்சனை திருமணம் செய்து கொண்ட நிலையில் அவருக்கு ஆராத்யா என்ற மகள் இருக்கிறார். என்னையும் அப்படி செய்தார்கள்..... கசப்பான அனுபவம் குறித்து ஐஸ்வர்யா ராய்!இந்நிலையில் பேட்டி ஒன்றில் பேசிய ஐஸ்வர்யா ராய் தனது வாழ்வில் நடந்த கசப்பான அனுபவம் குறித்து பேசி இருக்கிறார். அப்போது அவர், தான் உருவக்கேலி போன்ற பிரச்சனைகளை எதிர்கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளார். அதாவது ஆராத்யா பிறந்ததற்கு பிறகு உடல் எடை அதிகரித்து விட்டதாகவும் அதனால் தன்னுடைய தோற்றத்தை கண்டு பலரும் உருவக்கேலி செய்ததாக தெரிவித்துள்ளார். மேலும் தாயான பிறகு உடலில் சில மாற்றங்கள் ஏற்படுவது இயற்கை தான் என்றும் கூறியுள்ளார் ஐஸ்வர்யா ராய்.

MUST READ