கமலுடன் ஜோடி சேரும் ஐஸ்வர்யா ராய்…
- Advertisement -
மணிரத்னம் இயக்கத்தில் கமல் நடிக்கும் தக் லைப் படத்தில் ஐஸ்வர்யா ராய் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

உலக நாயகனாக உலகம் முழுவதும் தனக்கென தனி ரசிகர் பட்டாளம் கொண்டவர் கமல்ஹாசன். இவரது நடிப்பில் இறுதியாக வௌியான திரைப்படம் விக்ரம். லோகேஷ் கனகராஜ் இப்படத்தை இயக்கி இருந்தார். நடிப்பு மட்டுமன்றி அரசியல் மற்றும் தயாரிப்பு ஆகிய இரண்டிலும் அவர் கவனம் செலுத்தி வருகிறார். ராஜ்கமல் நிறுவனத்தின் மூலம் அவர் பல படங்களை தயாரித்து வருகிறார். ராஜ்குமார் பெரியசாமி மற்றும் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகும் படம், சிம்பு நடிக்கும் புதிய படம் ஆகியவற்றை தயாரிக்கிறார்.

இதனிடையே, அவர் ஷங்கர் இயக்கும் இந்தியன் இரண்டாம் பாகத்தில் நடித்து முடித்துள்ளார். இதைத் தொடர்ந்து எச். வினோத் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கிறார். அடுத்து, மணிரத்னம் இயக்கத்தில் அவர் நடிக்க உள்ளார். இத்திரைப்படத்திற்கு தக் லைப் என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. மேலும், ஏ.ஆர்.ரஹ்மான் இத்திரைப்படத்திற்கு இசை அமைக்கிறார்.

‘நாயகன்’ படத்தை அடுத்து 35 வருடங்கள் கழித்து இந்தக் கூட்டணி மீண்டும் இணைகின்றனர். படத்தில் மலையாள பிரபலம் துல்கர் சல்மான், ஜெயம் ரவி மற்றும் த்ரிஷா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்நிலையில், இத்திரைப்படத்தில் பிரபல பாலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராயும் இணைந்துள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வௌியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.