விஜய்யிடம் ஐஸ்வர்யா ராஜேஸ் வைத்த புது கோரிக்கை
கோலிவுட் எனும் தமிழ் திரையுலகில் தனக்கென தனி இடம் பிடித்து, தனி ரசிகர் பட்டாளத்தையும் உருவாக்கிக் கொண்டவர் நடிகர் விஜய். நாளைய தீர்ப்பு படத்தில் தொடங்கிய நடிகர் விஜய்யின் திரைப்பயணம், இன்று வரை ஏறுமுகமாக சென்று கொண்டிருக்கிறது. முகம், உடல் எடை, தோற்றம் என அனைத்திற்கும் கேலி, கிண்டல் செய்யப்பட்ட ஒரு இளைஞன், இன்று ஒட்டுமொத்த இந்திய திரையுலமும் கொண்டாடும் தளபதியாக உயர்ந்து நிற்கிறார்.
சினிமாவில் பிசியாக நடித்துக் கொண்டிருக்கும் விஜய் புதிய அரசியல் கட்சியை தொடங்கினார். அண்மையில் தொடங்கப்பட்ட இந்த கட்சிக்கு தமிழக வெற்றி கழகம் என்று பெயர் வைத்துள்ளனர். கட்சி தொடங்கியது முதலே அடுத்தடுத்து அரசியல் போர்க்களத்திற்கு தேவையான பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. அதுமட்டுமன்றி அரசியல் கட்சியை தொடங்கியதும், நடிப்புக்கு முழுக்கு போடவும் நடிகர் விஜய் திட்டமிட்டுள்ளார். தற்போது கோட் படத்தில் நடித்து வரும் விஜய் அடுத்து ஒரு படத்தில் நடித்துவிட்டு, நடிப்பிலிருந்து ஓய்வு பெறுவதாக தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், நடிகை ஐஸ்வர்யா ராஜேஸ் விஜய்யிடம் புதிய கோரிக்கை ஒன்றை வைத்துள்ளார். தனியார் நிகழ்ச்சி பேட்டியில் இது தொடர்பாக பேசிய அவர், தனக்கு விஜய்யை மிகவும் பிடிக்கும், அவர் நடிப்பில் வெளிியாகும் திரைப்படங்கள் மக்களை கவர்கின்றன. ஆனால், தற்போது அவர் நடிப்பிலிருந்து விலகுவதாக தெரிவித்துள்ளார். விஜய்யை சந்தித்து பேசும் வாய்ப்பு கிடைத்தால், நிச்சயம் சினிமாவை விட்டு விலக வேண்டாம் என கோரிக்கை வைப்பதாக குறிப்பிட்டுள்ளார்.