Homeசெய்திகள்சினிமாஐஸ்வர்யா ராஜேஷின் 'ஃபர்ஹானா' படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அப்டேட்!

ஐஸ்வர்யா ராஜேஷின் ‘ஃபர்ஹானா’ படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அப்டேட்!

-

- Advertisement -

ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் கடந்த மே 12 ஆம் தேதி ஃபர்ஹானா திரைப்படம் வெளியானது.
இப்படத்தை ஒரு நாள் கூத்து, மான்ஸ்டர் உள்ளிட்ட படங்களை இயக்கிய நெல்சன் வெங்கடேசன் இயக்கியுள்ளார்.
இந்தப் படத்தை ட்ரீம் வாரியார் பிச்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
இந்த படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் உடன் இணைந்து செல்வராகவன், ஜித்தன் ரமேஷ்,அனு மோல், ஐஸ்வர்யா தத்தா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

ஒரு இஸ்லாமிய பெண் தனது குடும்பத்திற்காக மத கட்டுப்பாடுகளை மீறி வேலைக்குச் செல்லும் சூழலில், அந்தப் பெண்ணின் மனநிலை எவ்வாறு மாறுகின்றன என்பது மிக எதார்த்தமாக படமாக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தில் இஸ்லாமியர்களுக்கு எதிரான பல கருத்துக்கள் இடம்பெற்றிருக்கிறது என்று பல சர்ச்சைகளில் சிக்கியது. இஸ்லாமியர்கள் இந்த படத்தை தடை செய்ய கோரிக்கை விடுத்தனர். ஆனால் இதையெல்லாம் தாண்டி இந்த படம் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பு பெற்றது.

இந்நிலையில் இந்த படம் வருகின்ற ஜூலை 7ஆம் தேதி சோனி லைவ் ஓ டி டி தளத்தில் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

MUST READ