Homeசெய்திகள்சினிமாமேடையில புகழுவாங்க, ஆனா படத்துல நடிக்க வாய்ப்பு தரமாட்டாங்க… நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் வேதனை!

மேடையில புகழுவாங்க, ஆனா படத்துல நடிக்க வாய்ப்பு தரமாட்டாங்க… நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் வேதனை!

-

- Advertisement -

தன்னை மேடையில் புகழும் பெரிய நடிகர்கள் தன்னை அவர்கள் படங்களில் நடிக்க வாய்ப்பு தருவதில்லை என்று நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.
நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தற்போது தமிழின் முன்னணி நடிகைகளில் ஒருவராக உருவெடுத்துள்ளார். தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மொழியிலும் நல்ல படங்களை பெற்று வருகிறார். பெண் மையக் கதாபாத்திரங்கள் கொண்ட படங்களில் தற்போது அதிகம் காணப்படுகிறார் ஐஸ்வர்யா ராஜேஷ். நயன்தாராவுக்கு அடுத்த படியாக பெண் மையக் கதாபாத்திரம் கொண்ட படங்களில் அதிகம் நடிப்பது ஐஸ்வர்யா ராஜேஷ் தான்.
இந்நிலையில் சமீபத்தில் பேட்டி அளித்துள்ள ஐஸ்வர்யா ராஜேஷ், “ஹீரோக்களை விட அதிகமான ஹீரோயின்கள் நம் திரைத்துறையில் இருக்கின்றனர். அதனால் நடிகைகளுக்கு மிகவும் குறைவாகவே வாய்ப்புகள் கிடைக்கும். என் விஷயத்திற்கு வரும்போது, பல ஸ்டார் நடிகர்கள் என்னை மேடையில் நான் அற்புதமாக நடிப்பதாகப் புகழ்கிறார்கள். ஆனால், அவர்கள் என்னை தங்கள் படங்களில் நடிக்க விரும்புவதில்லை.
சிறிய பட்ஜெட்டில் பெண்களை மையமாகக் கொண்ட திரைப்படங்கள் மூலம் எனெக்கென்று தனி இடத்தை உருவாக்கியுள்ளேன். இப்போது எனக்கென்று தனி ரசிகர்கள் உள்ளனர். எனவே அது மாதிரியான படங்களில் தொடர்ந்து நடிப்பேன். நான் ஏற்கனவே இதுபோன்ற 15 படங்களில் நடித்துள்ளேன்” என்று தெரிவித்துள்ளார்.

MUST READ