Homeசெய்திகள்சினிமாஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் 'சிஸ்டர்'.... மோஷன் போஸ்டர் வெளியீடு!

ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் ‘சிஸ்டர்’…. மோஷன் போஸ்டர் வெளியீடு!

-

ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் 'சிஸ்டர்'.... மோஷன் போஸ்டர் வெளியீடு!நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர். இவர் தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழி படங்களிலும் நடித்து வருகிறார். கடந்த 2012 ஆம் ஆண்டு தினேஷ் நடிப்பில் வெளியான அட்டகத்தி படத்தின் மூலம் பிரபலமானவர் ஐஸ்வர்யா ராஜேஷ். அதைத்தொடர்ந்து இவர் காக்கா முட்டை, தர்மதுரை, நம்ம வீட்டு பிள்ளை உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார். சமீப காலமாக ஐஸ்வர்யா ராஜேஷ் பல்வேறு படங்களில் தொடர்ச்சியாக நடித்து வருகிறார். அதேசமயம் கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதாபாத்திரங்களையும் ஏற்று நடித்து வருகிறார். அந்த வகையில் இவர் நடிப்பில் வெளியான ஃப்ர்ஹானா, சொப்பன சுந்தரி, டி கிரேட் இந்தியன் கிச்சன் உள்ளிட்ட படங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. மேலும் சில படங்களையும் கைவசம் வைத்திருக்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ்.

இந்நிலையில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் உருவாகி வரும் சிஸ்டர் படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகி உள்ளது. இந்த படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் உடன் இணைந்து யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

இந்த படத்தை சவரி முத்து இயக்குகிறார். துவாரகா ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் இந்த படத்திற்கு டி.இமான் இசையமைத்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்புகள் கடந்த மாதம் தொடங்கப்பட்ட நிலையில் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படம் மருத்துவமனையில் பணிபுரியும் செவிலியர் ஒருவரின் வாழ்க்கையின் நடக்கும் சம்பவங்களை மையமாக வைத்து, காமெடி கலந்த கதை களத்தில் தயாராகி வருகிறது.

நேற்று ஐஸ்வர்யா ராஜேஷ் தனது 34 ஆவது பிறந்த நேற்று கொண்டாடிய நிலையில் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவிக்கும் விதமாக சிஸ்டர் படத்தின் மோஷன் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. இதனை ஜிவி பிரகாஷ், ஆதிக் ரவிச்சந்திரன், அருண் ராஜா காமராஜ் உள்ளிட்டோர் தங்களின் சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளனர்.

மேலும் இந்த படம் தொடர்பான அடுத்தடுத்த அப்டேட்டுகள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

MUST READ