Homeசெய்திகள்சினிமாஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் புதிய படத்தின் டைட்டில் லுக் வெளியீடு!

ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் புதிய படத்தின் டைட்டில் லுக் வெளியீடு!

-

ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் புதிய படத்தின் டைட்டில் லுக் வெளியாகி உள்ளது.ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் புதிய படத்தின் டைட்டில் லுக் வெளியீடு!தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஐஸ்வர்யா ராஜேஷ். இவர் விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன், தனுஷ் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து பணியாற்றி வருகிறார். சமீப காலமாக இவர், கதாநாயகிக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அந்த வகையில் சொப்பண சுந்தரி, ரன் பேபி ரன், டிரைவர் ஜமுனா, பர்ஹானா போன்ற படங்களில் நடித்துள்ளார். மேலும் தீயவர் குலைகள் நடுங்க, சிஸ்டர் போன்ற படங்களை கைவசம் வைத்துள்ளார். இந்நிலையில் ஐஸ்வர்யா ராஜேஷ் அடுத்ததாக கதாநாயகியை மையப்படுத்திய கதைக்களம் ஒன்றில் நடிக்கிறார். இந்த படத்தை அறிமுக இயக்குனர் மனோ பாரதி இயக்குகிறார். மகேந்திரா எம் ஹென்றி படத்திற்கு ஒளிப்பதிவு செய்ய பிரிட்டோ மைக்கேல் இதற்கு இசை அமைக்கிறார். இதனை ஆக்சஸ் பிலிம் ஃபேக்ட்ரி நிறுவனம் தயாரிக்கிறது. ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் புதிய படத்தின் டைட்டில் லுக் வெளியீடு!தற்போது இந்த படத்தின் டைட்டில் லுக் போஸ்டரை பட குழுவினர் வெளியிட்டுள்ளனர். அதன்படி இந்த படத்திற்கு வளையம் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இப்படம் ஆக்சன் படமாக உருவாகி வருகிறது. விரைவில் இப்படம் சம்பந்தமான மற்ற அப்டேட்டுகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

MUST READ