பிரபல தெலுங்கு நடிகருக்கு ஜோடியாகும் ஐஸ்வர்யா ராஜேஸ்
பிரபல தமிழ் நடிகை ஐஸ்வர்யா ராஜேஸ், தெலுங்கு சினிமாவில் பிரபல நடிகராக வலம் வரும் வெங்கடேஷூக்கு ஜோடியாக நடிக்க உள்ளார்.
கோலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஸ். இவர் தமிழில் பல படங்களில் நடித்திருக்கிறார். ஆனால், அவரது முகத்தை மக்கள் மத்தியில் ஆழமாக கொண்டு சேர்த்த திரைப்படம் என்றால் அது காக்கா முட்டை. இளம் வயதிலேயே இரண்டு குழந்தைகளுக்கு அம்மாவாக நடித்து அனைவரின் பாராட்டையும் பெற்றார். அப்படத்தில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஸின் நடிப்பு பெரிதளவில் பாராட்டப்பட்டது. ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் இறுதியாக வெளியான திரைப்படம் டியர். இப்படத்தில் ஜிவி. பிரகாஷூடன் இணைந்து நடித்திருப்பார்.
தமிழில் முன்னணி நடிகையாக வலம் வரும் ஐஸ்வர்யா, தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி மொழியிலும் நடித்து வருகிறார். மலையாளத்திலும், அஜயண்டே ராண்டம் மோசனம் மற்றும் ஹெர் ஆகிய திரைப்படங்களில் ஐஸ்வர்யா நடித்து வருகிறார்.
இந்நிலையில், தெலுங்கில் அணில் ரவிப்புடி இயக்கும் புதிய திரைப்படத்தில் அவர் நடித்து வருகிறார். பிரபல தெலுங்கு நடிகர் வெங்கடேஷூக்கு ஜோடியாக நடிக்க ஐஸ்வர்யா ராஜேஸ் ஒப்பந்தமாகி இருக்கிறார். இதுமட்டுமன்றி ஐஸ்வர்யா நடிப்பில் கருப்பர் நகரம், தீயவர் குலைகள் நடுங்க, மோகன்தாஸ் மற்றும் வளையம் உள்ளிட்ட தமிழ் படங்கள் உருவாகி வருகின்றன.