Homeசெய்திகள்சினிமாவிவாகரத்து வழக்கில் ஆஜரான ஐஸ்வர்யா ரஜினிகாந்த்.... கோர்ட்டில் நடந்தது என்ன?

விவாகரத்து வழக்கில் ஆஜரான ஐஸ்வர்யா ரஜினிகாந்த்…. கோர்ட்டில் நடந்தது என்ன?

-

விவாகரத்து தொடர்பான வழக்கில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ஆஜராகி உள்ளார்.

நடிகர் தனுஷ் ஒரு பக்கம் நடிகராகவும் இயக்குனராகவும் செம பிசியாக வலம் வரும் நிலையில் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்தும் ஒரு இயக்குனராக திரைத்துறையில் வலம் வருகிறார் என்பது அனைவரும் அறிந்ததே. விவாகரத்து வழக்கில் ஆஜரான ஐஸ்வர்யா ரஜினிகாந்த்.... கோர்ட்டில் நடந்தது என்ன?இவர்கள் இருவரும் காதலித்து வந்த நிலையில் கடந்த 2004 ஆம் ஆண்டு பெற்றோர்கள் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டனர். அதைத்தொடர்ந்து திருமண வாழ்க்கையில் சந்தோஷமாக வாழ்ந்து வந்த இவர்கள் இருவரும் யாத்ரா மற்றும் லிங்கா ஆகிய இரு மகன்களை பெற்றெடுத்தனர். இருப்பினும் கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பாக இருவரும் திருமண உறவை முறித்துக் கொள்வதாக அறிவித்தனர். அதைத்தொடர்ந்து குடும்ப நல நீதிமன்றத்தில் கடந்த 2004 ஆம் ஆண்டு நடைபெற்ற தங்களின் திருமணம் செல்லாது என உத்தரவிடும்படி விவாகரத்து வழக்கு ஒன்றை பதிவு செய்தனர். அதன் பின்னர் மூன்று முறை இந்த வழக்கு விசாரணைக்கு வந்த நிலையிலும் இருவருமே ஆஜராகவில்லை. இதற்கிடையில் ரஜினியின் போயஸ் கார்டன் வீட்டில் தனுஷ் – ஐஸ்வர்யா இருவரும் ரகசியமாக சந்தித்து பேசினார்கள் என்று சமூக வலைதளங்களில் செய்திகள் வெளியாகி வருகிறது. விவாகரத்து வழக்கில் ஆஜரான ஐஸ்வர்யா ரஜினிகாந்த்.... கோர்ட்டில் நடந்தது என்ன?அதன்படி இருவரும் சமாதானம் ஆகிவிட்டார்கள் என்று சொல்லப்படுகிறது. இந்நிலையில் சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் தனுஷ் – ஐஸ்வர்யாவின் விவாகரத்து வழக்கு விசாரணைக்கு வந்திருக்கும் நிலையில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் கோர்ட்டில் ஆஜரானார். அவரை தொடர்ந்து நடிகர் தனுஷ் படப்பிடிப்பு தளத்திலிருந்து கிளம்பி கோர்ட்டிற்கு வந்தடைந்தார். இருவருமே நீதிபதி சுபாதேவி முன் ஆஜராகி இருந்த நிலையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு பின்னர் இவர்களின் விவாகரத்து வழக்கு தொடர்பான தீர்ப்பு வருகின்ற நவம்பர் 27ஆம் தேதி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

MUST READ