ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தயாரித்து, இயக்கும் புதிய படம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகளான ஐஸ்வர்யா ரஜினிகாந்த், தனுஷ் நடிப்பில் வெளியான 3 படத்தை இயக்கி பெயரையும் புகழையும் பெற்றவர். ஆனால் இவர் விஷ்ணு விஷால், விக்ராந்த் நடிப்பில் இயக்கியிருந்த லால் சலாம் திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை தரவில்லை. இதைத்தொடர்ந்து ஐஸ்வர்யா ரஜினிகாந்த், சித்தார்த் நடிப்பில் புதிய படம் ஒன்றை இயக்கப் போவதாக தகவல் வெளியானது. இதைத்தொடர்ந்து இந்த படம் அடுத்த கட்டத்திற்கு நகரவே இல்லை. இந்நிலையில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கப் போகும் புதிய படம் குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது.
அதாவது ஐஸ்வர்யா ரஜினிகாந்த், சிறிய பட்ஜெட் படம் ஒன்றை இயக்கப் போகிறாராம். அதுமட்டுமில்லாமல் அந்த படத்தை தானே தயாரிக்கப் போவதாகவும் முடிவு செய்து இருக்கிறாராம். அதாவது புதுமுக நடிகர்களை வைத்து ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தயாரித்த இயக்கப் போகும் புதிய படத்தின் முன்னணி வேலைகள் தொடங்கப்பட்டிருப்பதாக தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேசமயம் 2025 ஏப்ரல் 4 அன்று இந்த படத்தின் பூஜையை நடத்தவும் திட்டமிட்டுள்ளாராம் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். எனவே இனிவரும் நாட்களில் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.