Homeசெய்திகள்சினிமாவிக்ராந்த் நடிக்கும் புதிய படம்..... ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிடும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்!

விக்ராந்த் நடிக்கும் புதிய படம்….. ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிடும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்!

-

விக்ராந்த் நடிப்பில் உருவாகும் புதிய படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வெளியிட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.விக்ராந்த் நடிக்கும் புதிய படம்..... ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிடும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்!

நடிகர் விக்ரம் ஆரம்பத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து சினிமாவில் நுழைந்தவர். அதன் பின்னர் கடந்த 2005 ஆம் ஆண்டு வெளியான கற்க கசடற என்ற படத்தின் மூலம் தான் கதாநாயகனாக அறிமுகமானார். தொடர்ந்து கோரிப்பாளையம், முத்துக்கு முத்தாக, பாண்டியநாடு போன்ற படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அடுத்தது உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் வெளியான கெத்து திரைப்படத்தில் வில்லனாகவும் நடித்திருந்தார் விக்ராந்த். கடைசியாக விக்ராந்த், ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் வெளியான லால் சலாம் திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. அதைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் SK23 திரைப்படத்தில் நடித்து வருகிறார். விக்ராந்த் நடிக்கும் புதிய படம்..... ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிடும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்!இந்நிலையில்தான் விக்ராந்த் நடிக்கும் புதிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வெளியிட இருப்பதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதாவது பிக் பாங்க் சினிமா நிறுவனம் இந்த படத்தை தயாரிப்பதாகவும் வில் அம்பு படத்தில் இயக்குனர் ரமேஷ் சுப்பிரமணியம் இந்த படத்தை எழுதி இயக்குவதாகவும் அந்த போஸ்டரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த படத்தில் விக்ராந்துடன் இணைந்து நடிகர் யோகி பாபுவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் (செப்டம்பர் 7) இன்று மாலை 5 மணி அளவில் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

MUST READ