Homeசெய்திகள்சினிமாவெற்றிப்பாதையில் லால் சலாம்... அடுத்து சித்தார்த்தை இறக்க முடிவு...

வெற்றிப்பாதையில் லால் சலாம்… அடுத்து சித்தார்த்தை இறக்க முடிவு…

-

- Advertisement -
லால் சலாம் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, அடுத்ததாக சித்தார்த்தை வைத்து ஐஸ்வர்யா ரஜினிகாந்த் புதிய படத்தை இயக்க உள்ளதாக கூறப்படுகிறது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மகளும், இயக்குநரும் ஆவார் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். தனுஷை வைத்து 3 திரைப்படத்தை இயக்கி திரையுலகில் அறிமுகமானார். இப்படத்தில் ஸ்ருதிஹாசன் நடித்திருப்பார். இப்படத்தின் மூலம் இசையமைப்பாளர் அனிருத்தும் அறிமுகமானார். முதல் படத்திலேயே வித்தியாசமான கதைக்களத்தை உருவாக்கி ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றார். இதைத் தொடர்ந்து வை ராஜா வை படத்தை இயக்கினார். இப்படத்தில் கௌதம் கார்த்திக், பிரியங்கா மோகன், விவேக், டாப்ஸி ஆகியோர் நடித்திருந்தனர்.

இதைத் தொடர்ந்து ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கி நடித்திருந்த திரைப்படம் தான் லால் சலாம். இப்படத்தில் விஷ்ணு விஷால், வித்தார்த் ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ரஜினிகாந்த் மற்றும் பிரபல கிரிக்கெட் நட்சத்திரம் கபில் தேவ் ஆகியோர் கௌரவ வேடத்தில் நடித்துள்ளனர். நிரோஷா ராதாவும் ரஜினிகாந்திற்கு மனைவியாக நடித்திருக்கிறார். படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்தார். இத்திரைப்படம் கடந்த 9-ம் தேதி வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

வசூல் ரீதியாகவும் படம் எதிர்பார்த்த வெற்றி பெற்று வருகிறது. இதைத் தொடர்ந்து ஐஸ்வர்யா இயக்கும் அடுத்த படம்குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி, அடுத்ததாக நடிகர் சித்தார்த்தை வைத்து புதிய படம் இயக்க உள்ளார். இப்படத்திற்கும் இசையமைக்க ஏ.ஆர்.ரஹ்மானிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறதாம். படத்திற்கான முதல் கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.

MUST READ