Homeசெய்திகள்சினிமாஐஸ்வர்யா ரஜினிகாந்தின் 'லால் சலாம்'.... இரண்டாவது பாடல் வெளியீட்டு தேதி அறிவிப்பு!

ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் ‘லால் சலாம்’…. இரண்டாவது பாடல் வெளியீட்டு தேதி அறிவிப்பு!

-

- Advertisement -

ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் 'லால் சலாம்'.... இரண்டாவது பாடல் வெளியீட்டு தேதி அறிவிப்பு!ரஜினிகாந்தின் மூத்த மகளான ஐஸ்வர்யா ரஜினிகாந்த், தனுஷ் நடிப்பில் வெளியான 3 படத்தின் மூலம் தமிழ் சினிமாவின் இயக்குனராக அறிமுகமானவர். அதைத்தொடர்ந்து கௌதம் கார்த்திக் நடிப்பில் வை ராஜா வை என்னும் திரைப்படத்தை இயக்கி இருந்தார். சிறிய இடைவெளிக்குப் பிறகு தற்போது
லால் சலாம் எனும் திரைப்படத்தை ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கியுள்ளார்.
இப்படத்தில் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இந்த படத்தில் மொய்தீன் பாய் எனும் கதாபாத்திரத்தில் கௌரவத் தோற்றத்தில் நடித்துள்ளார். ரஜினிக்கு ஜோடியாக நிரோஷா நடித்துள்ளார். கிரிக்கெட் சம்பந்தமான கதைக்களம் என்பதால் கிரிக்கெட் வீரர் கபில் தேவ்-ம் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் 'லால் சலாம்'.... இரண்டாவது பாடல் வெளியீட்டு தேதி அறிவிப்பு!

லைக்கா ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார். இப்படம் பொங்கல் தினத்தை முன்னிட்டு வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் ஒரு சில காரணங்களால் இப்படம் வருகின்ற பிப்ரவரி ஒன்பதாம் தேதி வெளியாக இருக்கிறது. இதற்கிடையில் படத்தின் டீசர் மற்றும் முதல் பாடல் வெளியாகி கவனம் பெற்றது.

இந்நிலையில் லால் சலாம் படத்தின் இரண்டாவது பாடல் ஜனவரி 15ஆம் தேதி பொங்கல் தினத்தன்று வெளியாகும் என பட குழுவினர் போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

MUST READ