- Advertisement -
பிரபல பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன், முதல் தலித் கிரிக்கெட் வீரரின் வாழ்க்கை வரலாற்று திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார்.
பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜய் தேவ்கன். இவரது நடிப்பில் இறுதியாக சைத்தான் திரைப்படம் வெளியானது. இப்படத்தில் அஜய் தேவ்கனுடன் மாதவன் மற்றும் ஜோதிகா ஆகிய இருவரும் இணைந்து நடித்திருந்தனர். இத்திரைப்படத்தை அடுத்து ரோஹித் ஷெட்டி இயக்கும் சிங்கம் அகெய்ன் திரைப்படத்தில் அஜய் தேவ்கன் நடித்து வருகிறார். இது சூர்யா நடித்த சிங்கம் திரைப்படம் ரீமேக் படமாகும்.
இத்திரைப்படத்தில் ரன்வீர் சிங் மற்றும் தீபிகா படுகோனும் இணைந்து நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், பிரபல கிரிக்கெட் வீரர் பல்வங்கர் பாலுவின் வாழ்க்கை வரலாற்று திரைப்படத்தில் அஜய் தேவ்கன் நடிக்க இருக்கிறார். இவர் முதல் தலித் இந்தியன் கிரிக்கெட் வீரர் ஆவார். பல்வங்கரின் வாழ்க்கை கதை புத்தகத்தை மையப்படுத்தி இத்திரைப்படம் உருவாக உள்ளது.