டிமான்ட்டி காலனி 3 படம் குறித்த லேட்டஸ்ட் அப்டேட் வெளியாகி உள்ளது.
கடந்த 2015 ஆம் ஆண்டு அருள்நிதி, ரமேஷ் திலக், சனந்த், அபிஷேக் ஜோசப் ஆகியோரின் நடிப்பில் டிமான்ட்டி காலனி திரைப்படம் வெளியானது. அஜய் ஞானமுத்து இயக்கியிருந்த இந்த படம் ஹாரர் திரில்லர் ஜானரில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதைத்தொடர்ந்து அஜய் ஞானமுத்து, டிமான்ட்டி காலனி 2 திரைப்படத்தையும் இயக்கி இருந்தார். அருள்நிதி, பிரியா பவானி சங்கர் ஆகியோர் இந்த படத்தில் நடித்திருந்தனர். கடந்தாண்டு அக்டோபர் மாதம் இந்த படம் திரைக்கு கொண்டுவரப்பட்ட நிலையில் மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்தது. மேலும் இதில் அருள்நிதி இரட்டை வேடங்களில் நடித்திருந்தார். இந்த படத்தின் இறுதியில் டிமான்ட்டி காலனி படத்தின் மூன்றாம் பாகத்திற்கான லீட் கொடுக்கப்பட்டிருந்தது.
#DemonteColony3 Beginsss!! @arulnithitamil @priya_Bshankar @MeenakshiGovin2 @ActorMuthukumar @SamCSmusic @sivakvijayan @DemonteColony3 pic.twitter.com/HETl2sUYof
— Ajay R Gnanamuthu (@AjayGnanamuthu) April 2, 2025
எனவே இதன் மீதான எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் இருக்கும் நிலையில் தற்போது இப்படத்தின் இயக்குனர் அஜய் ஞானமுத்து டிமான்ட்டி காலனி 3 படம் குறித்து அப்டேட் கொடுத்துள்ளார். அதன்படி தனது எக்ஸ் தள பக்கத்தில் டிமான்ட்டி காலனி 3 படத்தின் பணிகள் தொடங்கப்பட்டிருப்பதாக குறிப்பிட்டு, மால்டாவின், ஸ்லீமாவில் படக்குழுவினருடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்றையும் பகிர்ந்துள்ளார். இந்த தகவல் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எனவே இனிவரும் நாட்களில் மற்ற அப்டேட்டுகள் வெளியாகும் எனவும் நம்பப்படுகிறது.