கடந்த 2023 ஆம் ஆண்டு விஷால் நடிப்பில் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட் அடித்த மார்க் ஆண்டனி திரைப்படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியிருந்தார். இந்த படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு ஆதிக் இயக்கியுள்ள திரைப்படம் தான் குட் பேட் அக்லி. இந்த படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் போதே இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது. அதன்படி இந்த படத்தில் இருந்து வெளியான டீசர், ட்ரைலர் ஆகியவை ரசிகர்களுக்கு விருந்து படைத்தது. எனவே அஜித்தின் தீவிர ரசிகனான ஆதிக் ரவிச்சந்திரன் அஜித்தை எப்படி திரையில் காட்டப் போகிறார் என்ற ஆர்வம் ரசிகர்கள் மத்தியில் இருந்த நிலையில் இன்று (ஏப்ரல் 10) திரையரங்குகளில் வெளியாகியிருக்கும் குட் பேட் அக்லி படத்தை காண ரசிகர்கள் கூட்டம் கூட்டமாக திரண்டு வருகின்றனர்.
அதன்படி படத்தில் அஜித் தோன்றும் ஒவ்வொரு காட்சிகளையும் ரசித்து ரசித்து செதுக்கியிருக்கிறார் ஆதிக். மேலும் படம் முழுக்க இருக்கும் அஜித் ரெபரன்ஸ் ரசிகர்களை ஆர்ப்பரிக்க செய்கிறது. இவ்வாறு இந்த படத்தை ரசிகர்கள் கொண்டாடி தீர்த்து வருகின்றனர். இதற்கிடையில் அஜித்தின் 64வது படத்தை யார் இயக்கப் போகிறார்? என்ற எதிர்பார்ப்பும் இருந்தது. அந்த வகையில் தனுஷ் அல்லது ஆதிக் ரவிச்சந்திரன் ஏகே 64 படத்தை இயக்கலாம் என்று சொல்லப்பட்டது. இந்நிலையில் தான் குட் பேட் அக்லி படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் ஏகே 64 படம் தொடர்பான ஹின்ட் வைத்திருந்தார் ஆதிக் ரவிச்சந்திரன்.
இதன் மூலம் 2026 இல் அஜித் – ஆதிக் கூட்டணியிலான அடுத்த படம் வெளிவரும் என்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. ஆகையினால் இந்த படத்தின் படப்பிடிப்பு இந்த ஆண்டு இறுதியில் அல்லது அடுத்த ஆண்டு தொடக்கத்தில் ஆரம்பிக்கப்படும் என தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. அதுமட்டுமில்லாமல் அஜித்தை வைத்து ஆதிக் இயக்கும் அடுத்த படம் குட் பேட் அக்லி படத்திலிருந்து முற்றிலும் மாறுபட்டதாக இருக்கும் என சொல்லப்படுகிறது. இது தொடர்பான மற்ற அப்டேட்டுகள் இனிவரும் நாட்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- Advertisement -