‘துணிவு’ படத்தின் வெற்றிக்குப் பிறகு அஜித்தின் 62 ஆவது படத்தை விக்னேஷ் சிவன் இயக்க இருப்பதாக கூறப்பட்டது. பின்னர் ஒரு சில காரணங்களால் தற்போது இயக்குனர் மகிழ் திருமேனி AK 62 வை இயக்குகிறார்.
இவர் தடம், தடையறத் தாக்க, கலகத் தலைவன் உள்ளிட்ட படங்களை இயக்கியவர். தற்போது அஜித்தின் 62 ஆவது படத்தை ‘விடாமுயற்சி ‘ என்ற தலைப்பில் இயக்க உள்ளார். இப்படம் லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பிலும் அனிருத் இசையிலும் உருவாக உள்ளது.
மேலும் இந்த படத்தில் அஜித்துடன் திரிஷா கதாநாயகியாகவும் மற்றும் அர்ஜுன் தாஸ் வில்லனாகவும் இணைந்து நடிப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்க இருக்கிறது.
‘விடாமுயற்சி’ படத்தை தொடர்ந்து அஜித் தனது அடுத்த படத்தை சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிக்க இருப்பதாக புதிய தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.
ஏற்கனவே அஜித் மற்றும் சிறுத்தை சிவா கூட்டணியில் வெளிவந்த வீரம், வேதாளம், விவேகம், விஸ்வாசம் உள்ளிட்ட திரைப்படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது.
தற்போது 5வது முறையாக இவர்களின் கூட்டணியில் புதிய படம் உருவாக இருப்பது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் செய்திகள் பரவி வருகிறது.