நடிகர் அஜித் தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக வலம் வருபவர். இவர் கடைசியாக எச் வினோத் இயக்கத்தில் துணிவு திரைப்படத்தில் நடித்திருந்தார். அதைத் தொடர்ந்து மகிழ் திருமேனி இயக்கி வரும் விடாமுயற்சி திரைப்படத்தில் நடிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே தொடங்கப்பட்டு 50 சதவீத படப்பிடிப்புகள் நிறைவடைந்துள்ளது. இதன் அடுத்த கட்ட படப்பிடிப்புகள் விரைவில் தொடங்க உள்ளது. அதேசமயம் நடிகர் அஜித் தன்னுடைய 63வது படத்தில் நடிப்பதற்கு கமிட் ஆகியுள்ளார். இந்த படத்திற்கு குட் பேட் அக்லி என்ற தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்க உள்ளார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பிலும் தேவி ஸ்ரீ பிரசாத்தின் இசையிலும் இந்த படம் உருவாக இருக்கிறது. இது சம்பந்தமான அறிவிப்பு கடந்த சில தினங்களுக்கு முன்பாக வெளியான நிலையில் படத்தின் மீதான எதிர்பார்ப்பும் அதிகமாகி வருகிறது. அதுமட்டுமில்லாமல் இந்த படத்தில் நடிகர் அஜித் மூன்று வேடங்களில் நடிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. மேலும் படத்தின் படப்பிடிப்புகள் ஜூன் மாதத்தில் தொடங்க இருப்பதாகவும் படத்தினை 2025 பொங்கல் தினத்தை முன்னிட்டு வெளியிட இருப்பதாகவும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் சிறிது நாட்கள் பிரேக்கில் இருக்கும் அஜித் பல்வேறு இடங்களுக்கு பைக் ரைடு செல்வதும், நண்பர்களுடன் சுற்றுலா செல்வதுமாக தன்னுடைய ஓய்வு நேரத்தை கழித்து வருகிறார். இந்நிலையில் தான் கேரளாவில் தனது நண்பர்களுடன் நடிகர் அஜித் பிரியாணி சமைத்து சாப்பிடும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஏற்கனவே நடிகர் ஆரவ் போன்ற நண்பர்களுடன் மத்திய பிரதேசத்திற்கு பயணம் சென்ற நடிகர் அஜித் பிரியாணி சமைத்து சாப்பிட்ட புகைப்படங்களும் வைரலாகி வந்தது குறிப்பிடத்தக்கது.