Homeசெய்திகள்சினிமாஅஜித், தனுஷ் கூட்டணியில் உருவாகும் புதிய படம்.... இசையமைப்பாளர் யார் தெரியுமா?

அஜித், தனுஷ் கூட்டணியில் உருவாகும் புதிய படம்…. இசையமைப்பாளர் யார் தெரியுமா?

-

- Advertisement -

அஜித், தனுஷ் கூட்டணியில் உருவாகும் புதிய படம் தொடர்பான லேட்டஸ்ட் அப்டேட் வெளியாகியுள்ளது.அஜித், தனுஷ் கூட்டணியில் உருவாகும் புதிய படம்.... இசையமைப்பாளர் யார் தெரியுமா?

நடிகர் தனுஷ் தற்போது இட்லி கடை எனும் திரைப்படத்தை தானே இயக்கி நடித்து வருகிறார். இந்த படம் நடிகர் தனுஷின் 52 வது படமாகும். இப்படத்தை டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க படமானது 2025 ஏப்ரல் 10 அன்று திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதற்கு முன்னதாக நடிகர் தனுஷ் பவர் பாண்டி, ராயன், நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் என அடுத்தடுத்த படங்களை இயக்கி ஒரு இயக்குனராக வெற்றி பெற்று வருகிறார். இந்நிலையில் தான் நடிகர் தனுஷ், அஜித்தை இயக்கப் போவதாக சமூக வலைதளங்களில் தொடர்ந்து பல தகவல்கள் தீயாய் பரவி வருகிறது. அதாவது அஜித், தனுஷ் காம்போவில் புதிய படம் உருவாக உள்ள தகவல் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அதேசமயம் ரசிகர்களும் இந்த காம்பினேஷனில் உருவாகும் படம் எப்படி இருக்கும் என கற்பனை செய்ய தொடங்கிவிட்டனர். தற்போது இதன் கூடுதல் தகவல் என்னவென்றால் தனுஷ் இயக்கத்தில் அஜித் நடிக்க உள்ள புதிய படத்திற்கு அனிருத் இசை அமைக்கப் போகிறார் என லேட்டஸ்ட் அப்டேட் வெளிவந்துள்ளது. அஜித், தனுஷ் கூட்டணியில் உருவாகும் புதிய படம்.... இசையமைப்பாளர் யார் தெரியுமா?அதாவது ஏற்கனவே தனுஷ் – அனிருத் காம்போவில் வந்த பாடல்கள் பெரும்பாலானவை சூப்பர் டூப்பர் ஹிட் அடித்துள்ளது. மேலும் அஜித்தின் விடாமுயற்சி திரைப்படத்திற்கு அனிருத் இசை அமைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் அஜித், தனுஷ், அனிருத் ஆகிய மூவரும் இணைய உள்ள தகவல் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை தந்துள்ளது. இனிவரும் நாட்களில் மற்ற அப்டேட்டுகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

MUST READ