தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான அஜித் தற்போது தனது 62 ஆவது படமான விடாமுயற்சி திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதற்கிடையில் நடிகர் அஜித் நேற்றைய முன் தினம் அப்பல்லோ மருத்துவமனையில் சாதாரண பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். அதைத் தொடர்ந்து நடிகர் அஜித்துக்கு மூளையில் கட்டி இருப்பதாக பல தகவல்கள் சமூக வலைதளங்களில் பரவி வந்தது. இருப்பினும் சாதாரண பரிசோதனைக்காக மட்டுமே அஜித் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும் இது தொடர்பாக நடிகர் அஜித்தின் மேனேஜர் சுரேஷ் சந்திரா, “அஜித்துக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது உண்மைதான் ஆனால் மூளைக்கும் கழுத்துக்கும் இடையில் உள்ள நரம்பில் வீக்கம் இருந்ததால் அதனை அரை மணி நேரத்தில் மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மூலம் சரி செய்து விட்டனர்” என்று அவர் தெரிவித்திருந்த நிலையில் மருத்துவமனை நிர்வாகமும் அஜித் நலமுடன் இருப்பதாக அறிவித்திருந்தது. அதைத்தொடர்ந்து ஜெனரல் வார்டுக்கு மாற்றப்பட்ட அஜித் ஓய்வில் இருந்தார். அதன் பின்னர் இன்று அதிகாலை நலமுடன் வீடு திரும்பினார். இந்த தகவல் அறிந்த
அஜித் ரசிகர்கள் பெருமூச்சு விட்டுள்ளனர்.
அடுத்ததாக விடாமுயற்சி படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு மார்ச் 15ஆம் தேதி தொடங்க இருக்கிறது. எனவே விரைவில் அஜித் விடாமுயற்சி படப்பிடிப்பில் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.