Homeசெய்திகள்சினிமாஅப்படி போடு.... அஜித் ரசிகர்களே.. 'குட் பேட் அக்லி' படத்தில் இத கவனிச்சீங்களா?

அப்படி போடு…. அஜித் ரசிகர்களே.. ‘குட் பேட் அக்லி’ படத்தில் இத கவனிச்சீங்களா?

-

- Advertisement -

கடந்த பிப்ரவரி மாதம் வெளியான விடாமுயற்சி படத்திற்கு பிறகு மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் இன்று (ஏப்ரல் 10) திரையரங்குகளில் வெளியான திரைப்படம் தான் குட் பேட் அக்லி. அப்படி போடு.... அஜித் ரசிகர்களே 'குட் பேட் அக்லி' படத்தில் இத கவனிச்சீங்களா?மார்க் ஆண்டனி படத்தில் மாபெரும் வெற்றிக்கு பிறகு ஆதிக் ரவிச்சந்திரன் இந்த படத்தை இயக்கியுள்ளார். அதுமட்டுமில்லாமல் அவர் அஜித்தின் தீவிர ரசிகன் என்பதால் இந்த படத்தில் அஜித்தை எப்படி காட்டப் போகிறார்? என்பதை பார்க்க ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் காத்துக் கொண்டிருந்தனர். அதன்படி தரமான ஃபேன் பாய் சம்பவத்தை செய்துள்ளார் ஆதிக். வழக்கம்போல் அஜித் ஒட்டுமொத்த படத்தையும் தனது தோளில் தாங்கிப் பிடித்திருக்கிறார். அதேபோல், அர்ஜுன் தாஸ் அஜித்துக்கு எப்படி வில்லனாக நடிக்கப் போகிறார் என்ற கேள்விக்கு அதிரடியாக பதிலடி கொடுத்துள்ளார். படம் முழுக்க அஜித் ரெபரன்ஸ் ரசிகர்களை ஆர்ப்பரிக்க செய்கிறது. எனவே லாஜிக் பார்க்காமல் பார்த்தால் இந்த படம் அஜித் ரசிகர்களுக்கு சரியான தீனி போட்டுள்ளது.அப்படி போடு.... அஜித் ரசிகர்களே 'குட் பேட் அக்லி' படத்தில் இத கவனிச்சீங்களா? இவ்வாறு இந்த படத்தை ரசிகர்கள் கொண்டாடி தீர்த்து வரும் நிலையில் இந்த படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் ஏகே 64 படத்திற்கான ஹின்ட் கொடுக்கப்பட்டுள்ளது. அதாவது கார் ஒன்றின் நம்பர் பிளேட்டில் DIRAK 642026 என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் மூலம் அஜித்தின் அடுத்த படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் தான் இயக்கப் போகிறார் என்பது கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இந்த தகவல் ரசிகர்களுக்கு ரெட்டிப்பு மகிழ்ச்சியை தந்துள்ளது.

MUST READ