Homeசெய்திகள்சினிமாபுயலால் பாதிக்கப்பட்ட சென்னை மக்களுக்கு மறைமுகமாக உதவி செய்யும் அஜித்

புயலால் பாதிக்கப்பட்ட சென்னை மக்களுக்கு மறைமுகமாக உதவி செய்யும் அஜித்

-

- Advertisement -

மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட சென்னை மக்களுக்கு அஜித் ரசிகர்கள் மறைமுகமாக தேவையான உதவிகளை செய்து வருகின்றனர்.

சென்னை மக்கள் மிக்ஜாம் புயலால் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். அரசும், அரசு அதிகாரிகளும், தன்னார்வலர்களும் தனியார் நிறுவனங்களும் தொடர்ந்து இரவு-பகல் பார்க்காமல் உதவிகள் செய்து வருகின்றனர். அதேபோல் பிரபலங்களில் சூர்யா-கார்த்தி, ஹரிஷ் கல்யாண் என நிதி உதவி செய்ய, விஜய் ரசிகர்கள், நடிகர் பார்த்திபன் ஆகியோர் சாலையில் இறங்கி உணவுகளை வழங்கி வருகின்றனர். வெள்ள பாதிப்பு குறித்து பதிவிட்ட நடிகர் விஜய், மக்கள் இயக்க நிர்வாகிகள் முடிந்த அளவு மக்களுக்கு உதவ வேண்டும் என வலியுறுத்தி இருக்கிறார். இதையடுத்து, விஜய் மக்க இயக்க நிர்வாகிகள் மட்டுமன்றி விஜய் ரசிகர்களும் படகில் சென்று வெள்ளத்தில் சிக்கிய மக்களுக்கு தேவையான உணவு உள்ளிட்ட பொருட்களை வழங்கி வருகின்றனர்.

மிக்ஜம் புயல் பாதிப்பு... களத்தில் இறங்கிய விஜய் மக்கள் இயக்கத் தொண்டர்கள்!

இந்த நிலையில் ரசிகர்கள் பலரும் அஜித் ஒரு உதவியும் செய்யவில்லை என சமூக வலைதளங்களில் கமெண்ட் செய்ய தொடங்கி விட்டனர். ஆனால் அஜித் எந்த ஒரு சத்தமும் இல்லாமல் தனது நண்பர்கள் மூலம் மக்களுக்கு உதவி செய்து வருகிறாராம். இந்த தகவல் தற்போது இணையத்தில் கசிய அஜித் எப்போதும் தான் செய்யும் உதவிகள் மற்றவர்களுக்கு தெரிய வேண்டும் என நினைக்க மாட்டார் என அவருக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்து வருகின்றனர்,

MUST READ