நடிகர் விஜயின் அரசியல் பிரவேசம் குறித்து அஜித் பட நடிகை ஒருவர் தனது கருத்தினை தெரிவித்துள்ளார்.
நடிகர் விஜய் தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக வலம் வருபவர். இதற்கு கோடான கோடி ரசிகர்கள் இருக்கிறார்கள். இவர் தற்போது தளபதி 69 படத்தில் நடித்து வருகிறார். இதைத்தொடர்ந்து நடிப்பிலிருந்து விலகும் விஜய் வருகின்ற 2026 சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் போட்டியிட இருக்கிறார். நடிகர் விஜயின் அரசியல் வருகைக்கு பலரும் தங்களின் ஆதரவை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் பிரபல நடிகை பாவனா சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தபோது அவரிடம் விஜயின் அரசியல் பிரவேசம் குறித்த கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு நடிகை பாவனா, “ஆல் தி பெஸ்ட் அவ்வளவுதான் சொல்வேன். அதைப் பற்றி எனக்கு அதிகம் தெரியாது” என்று பதில் அளித்தார்.
மேலும் இவர், தான் மலையாளத்தில் இரண்டு படங்களில் நடித்து வருவதாகவும் கன்னடத்தில் ஒரு படத்தில் நடித்து வருவதாகவும் கூறிய பாவனா தமிழில் நல்ல படம் வந்தால் நடிப்பேன் என்று கூறினார்.
நடிகை பாவனா தமிழில் ஜெயம் ரவியுடன் இணைந்து தீபாவளி, அஜித்துடன் இணைந்து அசல், மாதவன் உடன் இணைந்து வாழ்த்துக்கள் ஆகிய படங்களில் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.