Homeசெய்திகள்சினிமாகைமாறிய அஜித் படம்.....அப்போ AK63 பட இயக்குனர் யார்?

கைமாறிய அஜித் படம்…..அப்போ AK63 பட இயக்குனர் யார்?

-

கைமாறிய அஜித் படம்.....அப்போ AK63 பட இயக்குனர் யார்?கடைசியாக அஜித் நடிப்பில் துணிவு திரைப்படம் வெளியானது. இந்த படத்தில் அஜித்துடன் இணைந்து மஞ்சு வாரியர், ஜான் கொக்கேன், தர்ஷன் மற்றும் பலர் நடித்திருந்தனர். இப்படம் கடந்த ஜனவரி மாதம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இதைத்தொடர்ந்து அஜித்தின் 62 வது படத்தை விக்னேஷ் சிவன் இயக்க இருந்த நிலையில், ஒரு சில காரணங்களால் அதனை மகிழ் திருமேனி கையில் எடுத்துள்ளார். இயக்குனர் மகிழ் திருமேனி, தடம், தடையறத் தாக்க, கலகத் தலைவன் உள்ளிட்ட படங்களை இயக்கியவர்.கைமாறிய அஜித் படம்.....அப்போ AK63 பட இயக்குனர் யார்?

தற்போது மகிழ் திருமேனி இயக்கி வரும் அஜித்தின் 62வது படத்திற்கு விடாமுயற்சி என்று தலைப்பிடப்பட்டுள்ளது. லைக்கா நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கும் நிலையில் அனிருத் இதற்கு இசையமைக்கிறார்.

பல நாட்கள் தள்ளிப்போன விடாமுயற்சி திரைப்படத்தின் படப்பிடிப்பு சில நாட்களுக்கு முன்பாக அஜர்பைஜானில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் அஜித்துடன் இணைந்து திரிஷா, ஆரவ், சஞ்சய் தத் மற்றும் பலர் நடிக்கின்றனர்.கைமாறிய அஜித் படம்.....அப்போ AK63 பட இயக்குனர் யார்?

இந்நிலையில் அஜித்தின் 63வது படம் குறித்து சமீபத்தில் செய்திகள் வெளியாகி இருந்தது. அதன்படி மார்க் ஆண்டனி பட இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் அஜித்தின் 63வது படத்தை இயக்க இருப்பதாக கூறப்பட்டது. ஆனால் தற்போது அந்த படம் கைமாறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பிரபல தயாரிப்பு நிறுவனமான மைத்திரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் AK 63 படத்தை தயாரிக்க இருக்கிறது என்று கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டதாம். ஆனால் இதன் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இல்லையாம். விரைவில் AK 63 படத்தின் இயக்குனர் யார் என்பது குறித்த
அறிவிப்பு வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

MUST READ