நடிகர் அஜித் தமிழ் சினிமாவின் தல என்றும் அல்டிமேட் ஸ்டார் என்றும் ரசிகர்களால் கொண்டாடப்படுபவர். இவர் தனது தனித்துவமான நடிப்பின் மூலம் ஏராளமான ரசிகர்களை சேகரித்து வைத்திருக்கிறார். கடைசியாக இவரது நடிப்பில் துணிவு திரைப்படம் வெளியாகி பிரம்மாண்ட வெற்றி கண்டது. அதைத் தொடர்ந்து மகிழ் திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி எனும் திரைப்படத்தில் நடிக்கிறார் அஜித். இந்த படமானது 2024 ஆம் ஆண்டின் இறுதியில் அல்லது 2025 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் வெளியாகும் என்று தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. அதே சமயம் நடிகர் அஜித், மார்க் ஆண்டனி படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத், ஸ்பெயின் போன்ற பகுதிகளில் நடைபெற்று வருகிறது. படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடிக்க நடிகை திரிஷா ஒப்பந்தமாகியுள்ளார் என்று சொல்லப்படுகிறது.
Ajith sir with his Ferrari.
Video: Nikhil Nair | #AK #Ajith #Ajithkumar | #VidaaMuyarchi | #GoodBadUgly | pic.twitter.com/172k6IuoXM
— Ajith | Dark Devil (@ajithFC) September 10, 2024
இந்நிலையில் நடிகர் அஜித் சமீபத்தில் புதிதாக பல கோடி மதிப்பிலான ஃபெராரி காரை வாங்கி இருந்தார். அந்தக் காரில் அஜித் மாஸாக வலம் வரும் வீடியோ இணையத்தில் செம வைரலாகி வருகின்றன. மேலும் இந்த வீடியோ துபாயில் எடுக்கப்பட்டது என்று தகவல்கள் வெளியாகி இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.