Homeசெய்திகள்சினிமாபுதிய லுக்கில் அஜித்.... 'விடாமுயற்சி' பட புகைப்படங்களை வெளியிட்ட திரிஷா!

புதிய லுக்கில் அஜித்…. ‘விடாமுயற்சி’ பட புகைப்படங்களை வெளியிட்ட திரிஷா!

-

நடிகை திரிஷா விடாமுயற்சி பட புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.புதிய லுக்கில் அஜித்.... 'விடாமுயற்சி' பட புகைப்படங்களை வெளியிட்ட திரிஷா!

அஜித் நடிப்பில் கடைசியாக துணிவு திரைப்படம் வெளியான நிலையில் அதை தொடர்ந்து நடிகர் அஜித் விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி ஆகிய இரண்டு படங்களிலும் நடிப்பதற்கு கமிட்டாகி இருந்தார். அதன்படி ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் குட் பேட் அக்லி படத்தின் படப்பிடிப்புகள் முழுவதும் நிறைவடைந்த நிலையில் தற்போது படத்தின் பின்னணி வேலைகள் நடைபெற்று வருகின்றன. அதற்கு முன்னதாகவே அஜித்தின் 62 வது படமான விடாமுயற்சி திரைப்படம் தொடங்கப்பட்டது. இந்த படத்தினை மீகாமன், கடையற தாக்க, தடம் ஆகிய படங்களை இயக்கி ரசிகர்கள் மத்தியில் பிரபலமான மகிழ் திருமேனி இயக்கி வருகிறார். இந்த படமானது லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பிலும் அனிருத்தின் இசையிலும் உருவாகி வருகிறது. ஓம் பிரகாஷ் இந்த படத்தின் ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார். இந்தப் படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடிகை திரிஷா நடிக்க வில்லனாக அர்ஜுன் நடிக்கிறார். ஏற்கனவே இந்த படத்தின் படப்பிடிப்புகள் கிட்டத்தட்ட 90 சதவீதம் நிறைவடைந்த நிலையில் தற்போது இந்த படத்தின் இறுதிக் கட்ட படப்பிடிப்புகள் பாங்காக் பகுதியில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் நடிகை திரிஷா, விடாமுயற்சி படத்தின் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அதில் நடிகர் அஜித், ஜேம்ஸ் பாண்ட் போல புதிய லுக்கில் காணப்படுகிறார். இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது. மேலும் விடாமுயற்சி திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கல் தினத்தை முன்னிட்டு திரைக்கு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ