Homeசெய்திகள்சினிமாமே 1இல் ட்ரிபிள் ட்ரீட் கொடுக்க போகும் அஜித்!

மே 1இல் ட்ரிபிள் ட்ரீட் கொடுக்க போகும் அஜித்!

-

தல என்று ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் நடிகர் அஜித். இவர் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையே வைத்துள்ளார். மே 1இல் ட்ரிபிள் ட்ரீட் கொடுக்க போகும் அஜித்!இவர் ஆக்சன் காட்சிகளானாலும் சரி, எமோஷனல் காட்சிகளானாலும் சரி அனைத்திலும் தரமான நடிப்பை வெளிப்படுத்துபவர். அதிலும் இவர் இரட்டை வேடங்களில் நடித்தால் தியேட்டர்களில் விசில் சத்தம் விண்ணை பிளக்கும். அதன்படி இவர் பல படங்களில் இரட்டை கதாபாத்திரங்களையும் வரலாறு போன்ற படத்தை மூன்று கதாபாத்திரங்களிலும் நடித்திருக்கிறார். கடைசியாக அஜித் துணிவு திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது. அதைத்தொடர்ந்து மகிழ் திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி திரைப்படத்தில் நடித்து வருகிறார் அஜித். இந்த படத்தின் படப்பிடிப்புகள் 50 சதவீதம் நிறைவடைந்துள்ள நிலையில் அடுத்த கட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருப்பதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் அஜித் தன்னுடைய 63வது படமான குட் பேட் அக்லி திரைப்படத்திலும் நடிப்பதற்கு கமிட் ஆகியுள்ளார்.

இவ்வாறு அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தி வரும் அஜித், 2024 மே மாதம் 1ஆம் தேதி தன்னுடைய 53வது பிறந்த நாளை கொண்டாட இருக்கிறார். மே 1இல் ட்ரிபிள் ட்ரீட் கொடுக்க போகும் அஜித்!ஆகவே அஜித் ரசிகர்களுக்கு ட்ரீட் கொடுக்கும் விதத்தில் விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாக இருக்கிறது. அதுபோல அஜித்தின் பிளாக்பஸ்டர் ஹிட் படமான மங்காத்தா திரைப்படமும் ரீ ரிலீஸ் செய்யப்பட இருக்கிறது. மேலும் குட் பேட் அக்லி படக்குழுவினரும் அஜித் பிறந்த நாளை முன்னிட்டு ஏதாவது அப்டேட்டை வெளியிடுவார்கள் என்று நம்பப்படுகிறது. இதன் மூலம் அஜித்தின் இந்த பிறந்தநாளுக்கு ரசிகர்களுக்கு ட்ரிபிள் ட்ரீட் கிடைப்பது உறுதியாகிவிட்டது.

MUST READ