Homeசெய்திகள்சினிமாஅஜித்துடன் மீண்டும் இணையும் பிரபல தயாரிப்பு நிறுவனம்!

அஜித்துடன் மீண்டும் இணையும் பிரபல தயாரிப்பு நிறுவனம்!

-

துணிவு படத்தின் வெற்றிக்குப் பிறகு அஜித் தனது 62வது படமான விடா முயற்சியில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தை தடம், தடையற தாக்க, கலக தலைவன் உள்ளிட்ட படங்களை இயக்கிய மகிழ் திருமேனி இயக்க உள்ளார். இந்த படத்தில் அஜித்துடன் திரிஷா, அர்ஜுன் தாஸ் உள்ளிட்டோர் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் இந்த படத்தின் படப்பிடிப்பு இந்த ஆண்டு ஜூன் மாதத்தில் தொடங்கும் என கூறப்பட்டிருந்த நிலையில் இது தொடர்பான எந்த தகவலும் இதுவரை வெளிவரவில்லை. அஜித்தின் விடாமுயற்சி திரைப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்க இருந்த நிலையில், அந்நிறுவனத்தில் அமலாக்கத்துறை செய்த ரெயிடு மற்றும் அதனால் ஏற்பட்ட பிரச்சினைகள் உள்ளிட்ட காரணங்களால் விடாமுயற்சி படப்பிடிப்பு தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

மேலும் ‘விடாமுயற்சி’ படத்திற்கு பிறகு சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பிலும் சிறுத்தை சிவா இயக்கத்திலும் அஜித் ‘AK 63’ திரைப்படத்தில் நடிக்க இருப்பதாக சமீபத்தில் தகவல் வெளியாகி இருந்தது.
அதாவது வீரம், வேதாளம், விவேகம், விஸ் வாசம் படங்களை தொடர்ந்து 5வது முறையாக அஜித் மற்றும் சிறுத்தை சிவா கூட்டணி இணைய உள்ளது என சமூக வலைதளங்களில் செய்திகள் வெளியாகி வருகிறது.

இந்நிலையில் அஜித்தின் 64வது படம் குறித்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது. அதன் படி அஜித்தின் ‘AK 64’ படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான சத்திய ஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாக தற்போதைய தகவல் தெரிவிக்கிறது.சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் ஏற்கனவே அஜித்தின் விவேகம் மற்றும் விஸ்வாசம் திரைப்படத்தை தயாரித்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ