Homeசெய்திகள்சினிமாஆஹா... சமையலில் அசத்தும் அஜித்குமார்.. கமகமத்த விடாமுயற்சி படப்பிடிப்பு....

ஆஹா… சமையலில் அசத்தும் அஜித்குமார்.. கமகமத்த விடாமுயற்சி படப்பிடிப்பு….

-

விடாமுயற்சி படப்பிடிப்பின்போது நடிகர் அஜித்குமார் சமையல் செய்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

அஜித் நடிப்பில் எச் வினோத் இயக்கத்தில் நடப்பு ஆண்டு பொங்கலுக்கு வெளியான திரைப்படம் துணிவு. இத்திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. துணிவு படத்தை அடுத்து மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் நடித்து வரும் படம் விடாமுயற்சி. அஜித்துடன் த்ரிஷா, ஆரவ், ரெஜினா, அர்ஜூன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். நீரவ் ஷா இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார், இவர் ஏற்கனவே அஜித்தின் வலிமை, துணிவு, நேர்கொண்ட பார்வை உள்ளிட்ட திரைப்படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். படத்திற்கு அனிருத் இசை அமைக்கிறார். லைகா நிறுவனம் படத்தை தயாரிக்கிறது.

இப்படத்தின் படப்பிடிப்பு குறித்த செய்திகள் வெளியாகும் என ரசிகர்கள் எதிர்நோக்கி காத்திருக்கும் நிலையில், மிகவும் தாமதமாக படப்பிடிப்பு பணிகள் அஜர்பைஜானில் தொடங்கினர்.இதற்காக, விடாமுயற்சி படக்குழுவினர் அஜர்பைஜான் சென்றனர். அங்கு முதல் கட்ட படப்பிடிப்பை நிறைவு செய்த படக்குழு அண்மையில் சென்னை திரும்பியது. சிறிய இடைவெளிக்கு பிறகு மீண்டும் படக்குழு வெளிநாடு திரும்பியது.

விடாமுயற்சி படப்பிடிப்பு தளத்தில் ஓய்வு கிடைக்கும்போதெல்லாம் நடிகர் அஜித் தனக்கு பிடித்த வேலைகளை செய்து வருகிறார். சக நடிகர்களை அவர் எடுத்த புகைப்படம் அண்மையில் வெளியானது. இதேபோல, ரசிகர்களை அவர் சந்தித்துள்ளார். இந்நிலையில், படப்பிடிப்பு தளத்தில் அவர் சமையல் செய்த புகைப்படங்களும் வைரலாகி வருகின்றன.

MUST READ