Homeசெய்திகள்சினிமாஅஜித் நடிப்பில் விடாமுயற்சி... வெளியானது முதல் தோற்றம்...

அஜித் நடிப்பில் விடாமுயற்சி… வெளியானது முதல் தோற்றம்…

-

அஜித் நடிப்பில் உருவாகி இருக்கும் விடாமுயற்சி திரைப்படத்தின் முதல் தோற்றம் வௌியாகி உள்ளது.

மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் நடித்து வரும் படம் விடாமுயற்சி. இப்படத்தில் அஜித்துடன் த்ரிஷா, ஆரவ், ரெஜினா, அர்ஜூன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். நீரவ் ஷா இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார், இவர் ஏற்கனவே அஜித்தின் வலிமை, துணிவு, நேர்கொண்ட பார்வை உள்ளிட்ட திரைப்படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். படத்திற்கு அனிருத் இசை அமைக்கிறார். லைகா நிறுவனம் படத்தை தயாரிக்கிறது.
இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு மிகவும் தாமதமாக தொடங்கியது. ஒட்டுமொத்த படப்பிடிப்பும் அஜர்பைஜானில் நடைபெற்று வந்தது. இதனிடையே நடிகர் அஜித்குமார், மற்றொரு திரைப்படத்தில் கமிட்டானார். ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் குட் பேட் அக்லி திரைப்படத்தில் அஜித் நாயகனாக நடிக்கிறார். விடாமுயற்சி படப்பிடிப்புக்கு இடையே ஐதராபாத்தில் நடைபெற்ற குட் பேட் அக்லி படப்பிடிப்பில் அவர் கலந்து கொண்டார்.

இந்நிலையில், பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் விடாமுயற்சி திரைப்படத்தின் முதல் தோற்றம் சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது. விடாமுயற்சி படத்தின் அறிவிப்புக்கு பிறகு வரும் முதல் போஸ்டர் என்பதால், இணையத்தில் வைரலாகி வருகிறது.

MUST READ