நடிகர் அஜித் தமிழ் சினிமாவில் மிகப்பெரிய ஸ்டார் நடிகராக வலம் வருபவர். அந்த வகையில் இவரை ரசிகர்கள் பலரும் தல, அல்டிமேட் ஸ்டார் போன்ற பெயர்களால் அழைத்து வருகின்றனர்.
இவரது நடிப்பில் கடைசியாக வெளியான துணிவு திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. அடுத்தது இவரது நடிப்பில் விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி ஆகிய இரண்டு படங்களும் முழு வீச்சில் தயாராகி வருகின்றன. இந்த இரண்டு படங்களின் படப்பிடிப்பையும் முடித்த அஜித் இதன் டப்பிங் பணிகளையும் நிறைவு செய்துள்ளார். இதற்கிடையில் நடிகர் அஜித் தனது பெயரில் கார் ரேஸிங் அணி ஒன்றை தொடங்கி இருப்பதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டது.
அதன்படி அஜித்குமார் ரேஸிங் அணியின் உரிமையாளராகவும் முதன்மை ஓட்டுநராகவும் நடிகர் அஜித் செயல்படுவார் என தெரிவிக்கப்பட்டிருந்தது.. அதன்படி இந்த மாதம் துபாயில் கார் ரேஸிங் நடைபெற இருக்கிறது. படப்பிடிப்புகளுக்கு இடையில் ரேஸிங்கிற்காக மிகத் தீவிரமாக பயிற்சியிலும் ஈடுபட்டார் அஜித். இது தொடர்பான புகைப்படங்களும் வீடியோக்களும் இணையத்தில் வைரலாகி வந்தன. இந்நிலையில் அஜித் சிங்கப்பூரில் புத்தாண்டு கொண்டாட்டத்தை முடித்துவிட்டு சென்னை திரும்பி உள்ளார்.
Most gorgeous Visual in internet Today❤😍😍😍😍😍#Ajithkumar #VidaaMuyarchi pic.twitter.com/kKRAQ49Bjx
— AJITH FANS COMMUNITY (@TFC_mass) January 5, 2025
சென்னை திரும்பிய உடனே ரேஸிங்கில் கலந்துகொள்ள துபாய் புறப்பட்டார் அஜித். அப்போது அவர், விமான நிலையத்தில் தனது மனைவி ஷாலினி மற்றும் குழந்தைகளுக்கு அன்பு முத்தம் கொடுத்துவிட்டு புறப்பட்ட செல்லும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.