அஜித் தற்போது தனது 62 ஆவது படமான விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார். கைக்கா புரோடக்ஷன்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க மகிழ் திருமேனி இயக்கி வருகிறார். இதைத்தொடர்ந்து நடிகர் அஜித், மார்க் ஆண்டனி பட இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் தனது 63வது படத்தில் நடிக்க இருக்கிறார். இந்தப் படத்தை பிரபல தெலுங்கு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது. தேவி ஸ்ரீ பிரசாத் இதற்கு இசையமைக்க இருக்கிறார். இந்த படத்தின் பூஜை ஏற்கனவே சென்னையில் நடைபெற்ற நிலையில் படப்பிடிப்பு 2024 ஜூன் மாதம் தொடங்கப்பட இருக்கிறது. இது சம்பந்தமான அறிவிப்பை போஸ்டருடன் நேற்று படக்குழுவினர் வெளியிட்டிருந்தனர். அதன்படி இந்த படத்திற்கு குட் பேட் அக்லி என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே அஜித் ரசிகர்கள் விடாமுயற்சி படத்தின் அப்டேட் ஏதாவது வருமா என்று எதிர்பார்த்து காத்திருந்த நிலையில் எதிர்பாராத விதமாக ஏகே 63 அறிவிப்பு வெளியானது ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் குட் பேட் அக்லி படத்தின் முக்கிய தகவல் ஒன்று கிடைத்துள்ளது. அதாவது இந்த படத்தின் முக்கியமான காட்சிகள் ஜப்பானில் படமாக்கப்பட இருப்பதாக நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. எனவே இது எந்த மாதிரியான படமாக இருக்கும் என்ற தகவல் இனிவரும் நாட்களில் வெளியாகும் என்று நம்பப்படுகிறது.