அஜித்தின் விடாமுயற்சி படம் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.
துணிவு படத்தின் வெற்றிக்குப் பிறகு அஜித் தனது 62 ஆவது படமான விடாமுயற்சி படத்தில் நடிக்க இருக்கிறார். இந்தப் படத்தை லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் இயக்குனர் மகிழ் திருமேனி இயக்க உள்ளார். நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய அனிருத் இசையமைக்க இருக்கிறார்.
மேலும் இந்த படத்தில் அஜித்துடன் இணைந்து திரிஷா மற்றும் அர்ஜுன் தாஸ் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் இந்த படத்தில் அஜித் மிரட்டலான தோற்றத்தில் நடிக்க இருப்பதாகவும் செய்திகள் வெளியாகி வருகிறது. இந்த படத்தின் மோஷன் போஸ்டர் சில மாதங்களுக்கு முன்பு வெளியாகி ரசிகர்களிடைய நல்ல வரவேற்பு பெற்றது.
சமீபத்தில் அஜித் இந்த படத்தில் இரட்டை வேடங்களில் நடிக்க இருப்பதாகவும் சமூக வலைதளங்களில் பல தகவல்கள் பரவி வருகிறது.
அதேசமயம் இந்த படத்தின் படப்பிடிப்பு ஒரு சில காரணங்களால் தாமதமாகி வருகிறது. இதன் சூட்டிங் எப்போது தொடங்கும் என்ற கேள்விக்கு தற்போது பதில் கிடைத்துள்ளது. அதன்படி விடாமுயற்சி திரைப்படத்தின் படப்பிடிப்பு வருகின்ற ஆகஸ்ட் 17ஆம் தேதி தொடங்கும் என நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.