Homeசெய்திகள்சினிமாஅசர்பைஜானுக்கு பறந்த அஜித்... அடுத்த இன்னிங்ஸை தொடங்கிய விடாமுயற்சி படக்குழு!

அசர்பைஜானுக்கு பறந்த அஜித்… அடுத்த இன்னிங்ஸை தொடங்கிய விடாமுயற்சி படக்குழு!

-

அசர்பைஜானுக்கு பறந்த அஜித்... அடுத்த இன்னிங்ஸை தொடங்கிய விடாமுயற்சி படக்குழு!நடிகர் அஜித் நடிப்பில் மகிழ் திருமேனி இயக்கத்தில் பரபரப்பான ஆக்சன் படமாக உருவாகி வருகிறது விடாமுயற்சி. இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்புகள் ஏற்கனவே அசர்பைஜானில் நடைபெற்று முடிந்த நிலையில் சிறிய இடைவேளைக்குப் பிறகு தற்போது இரண்டாம் கட்ட படப்பிடிப்புகள் தொடங்கப்பட உள்ளன. இந்த இரண்டாம் கட்ட படப்பிடிப்பு 70 நாட்களுக்கு தொடர்ச்சியாக நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதனால் படத்தின் நாயகன் அஜித் மற்றும் படக்குழுவினர் அனைவரும் அசர்பைஜான் சென்றுள்ளனர். இந்த இரண்டாம் கட்ட படப்பிடிப்பிலிருந்து ஒளிப்பதிவாளர் ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு பணிகளை மேற்கொள்ள உள்ளார். இவர் ஏற்கனவே அஜித் நடித்த ஆரம்பம் படத்தில் ஒளிப்பதிவாளராக பணியாற்றினார். அசர்பைஜானுக்கு பறந்த அஜித்... அடுத்த இன்னிங்ஸை தொடங்கிய விடாமுயற்சி படக்குழு!மிகவும் ஸ்டைலிஷ் ஆன அஜித்தை வித்தியாசமான கோணங்களில் ஆரம்பம் படத்தில் காட்டி இருந்தார். மேலும் விடாமுயற்சியில் சாலைகளில் பல திரில்லிங்கான கார் சேஸிங் சீன்கள் படமாகப்பட உள்ளன. விறுவிறுப்பாக நடைபெற்று வரும் விடாமுயற்சியின் படப்பிடிப்பு முழுவதும் அடுத்த ஆண்டின் முதல் பாதிக்குள் முடிக்கப்பட்டு படமானது 2024 கோடை விடுமுறைக்கு வெளியிட திட்டமிடப்பட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

இந்த படத்தை லைக்கா ப்ரொடெக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்க அனிருத் இசை அமைக்கிறார். மேலும் இதில் அஜித் உடன் இணைந்து திரிஷா, ஆரவ் , சஞ்சய் தத் மற்றும் பலர் நடிக்கின்றனர்.

MUST READ