Homeசெய்திகள்சினிமாஉதயநிதி ஸ்டாலின் தயாரிப்பில் நடிக்கும் அஜித்..... இயக்குனர் யார் தெரியுமா?

உதயநிதி ஸ்டாலின் தயாரிப்பில் நடிக்கும் அஜித்….. இயக்குனர் யார் தெரியுமா?

-

- Advertisement -

நடிகர் அஜித், உதயநிதி ஸ்டாலின் தயாரிப்பில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது.உதயநிதி ஸ்டாலின் தயாரிப்பில் நடிக்கும் அஜித்..... இயக்குனர் யார் தெரியுமா?

நடிகர் அஜித் கடந்த 2023 ஆம் ஆண்டு வெளியான துணிவு திரைப்படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு விடாமுயற்சி திரைப்படத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்தை மகிழ் திருமேனி இயக்க இப்படம் வருகின்ற பிப்ரவரி 6ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது. அடுத்தது ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடித்திருக்கும் குட் பேட் அக்லி திரைப்படம் 2025 ஏப்ரல் 10 அன்று வெளியாக இருக்கிறது. இவ்வாறு நடிகர் அஜித்தின் இரண்டு படங்கள் ரிலீஸுக்கு தயாராகி வருகின்றன. இதற்கிடையில் நடிகர் அஜித் சிறுத்தை சிவா இயக்கத்தில் புதிய படம் ஒன்று நடக்கப் போவதாக சொல்லப்பட்டது. ஆனால் நடிகர் அஜித் தற்போது கார் பந்தயத்தில் பிஸியாக இருப்பதால் வருடத்திற்கு ஒரு படத்தில் தான் நடிக்கப் போகிறார் என்று தகவல் வெளியாகி வருகின்றன. இந்நிலையில் தான் பிரபல நடிகரும் துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலின் தயாரிப்பில் நடிகர் அஜித் புதிய படம் ஒன்றில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகியுள்ளாராம். உதயநிதி ஸ்டாலின் தயாரிப்பில் நடிக்கும் அஜித்..... இயக்குனர் யார் தெரியுமா?இவர்களது கூட்டணியில் உருவாகும் புதிய படத்தினை விஷ்ணுவரதன் இயக்கப் போவதாக தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏற்கனவே அஜித் நடிப்பில் வெளியான பில்லா ஆரம்பம் ஆகிய படங்களை விஷ்ணுவரத இயக்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அடுத்தது இந்த படத்திற்காக அஜித் தரப்பில் ரூ. 200 கோடி வரை சம்பளம் கேட்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி வருகின்றன. மேலும் இது தொடர்பான மற்ற அப்டேட்டுகள் இனிவரும் நாட்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

MUST READ