Homeசெய்திகள்சினிமா'போர் தொழில்' பட இயக்குனருடன் கைகோர்க்கும் அஜித்.... வெளியான புதிய தகவல்!

‘போர் தொழில்’ பட இயக்குனருடன் கைகோர்க்கும் அஜித்…. வெளியான புதிய தகவல்!

-

- Advertisement -

நடிகர் அஜித், போர் தொழில் பட இயக்குனருடன் கைகோர்க்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.'போர் தொழில்' பட இயக்குனருடன் கைகோர்க்கும் அஜித்.... வெளியான புதிய தகவல்!தமிழ் சினிமாவில் தல என்று ரசிகர்களால் கொண்டாடப்படும் அஜித் நடிப்பில் சமீபத்தில் விடாமுயற்சி திரைப்படம் வெளியானது. அதேசமயம் நடிகர் அஜித், மார்க் ஆண்டனி படத்தில் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் தனது 63வது திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படம் 2025 ஏப்ரல் 10ஆம் தேதி திரைக்கு வர தயாராகி வருகிறது. இதற்கிடையில் நடிகர் அஜித்தின் 64ஆவது படத்தை யார் இயக்கப் போகிறார் என்று எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் இருந்து வருகிறது. அதன்படி ஏற்கனவே வெளியான தகவலின் படி அஜித்தின் 64வது படத்தை கே ஜி எஃப் பட இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கப் போகிறார் என்று ஒரு தகவல் சமூக வலைதளங்களில் உலா வந்தது. அதன் பின்னர் சிறுத்தை சிவா, அஜித்தின் 64வது படத்தை இயக்கலாம் எனவும் சொல்லப்பட்டது. மேலும் வெங்கட் பிரபு, விஷ்ணுவரதன் ஆகியோரின் இயக்கத்தில் நடிகர் அஜித் தனது அடுத்தடுத்த படங்களில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகி இருப்பதாகவும் தகவல் கசிந்து வருகின்றன. இந்நிலையில் தான் நடிகர் அஜித், மகாராஜா படத்தின் இயக்குனர் நித்திலன் சாமிநாதனிடம் கதை கேட்டிருப்பதாகவும் வருங்காலத்தில் இவர்களது கூட்டணியில் புதிய படம் உருவாகலாம் என்றும் செய்திகள் பரவி வருகிறது. 'போர் தொழில்' பட இயக்குனருடன் கைகோர்க்கும் அஜித்.... வெளியான புதிய தகவல்!அதே வேளையில் நடிகர் அஜித், போர் தொழில் பட இயக்குனர் விக்னேஷ் ராஜாவுடன் கூட்டணி அமைக்கப் போவதாக புதிய தகவல்கள் தெரிவிக்கின்றன. அசோக் செல்வன், சரத்குமார் நடிப்பில் வெளியான போர் தொழில் திரைப்படம் ராட்சசன் படத்திற்கு பிறகு தரமான க்ரைம் திரில்லர் படமாக வெளிவந்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இந்நிலையில் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் அஜித் நடிக்க உள்ள தகவல் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி உள்ளது.

MUST READ