Homeசெய்திகள்சினிமாபெல்ஜியம் கார் ரேஸில் அஜித் செய்த சம்பவம்.... குவியும் வாழ்த்துக்கள்!

பெல்ஜியம் கார் ரேஸில் அஜித் செய்த சம்பவம்…. குவியும் வாழ்த்துக்கள்!

-

- Advertisement -

அஜித் நடிப்பில் கடந்த ஏப்ரல் 10 அன்று குட் பேட் அக்லி திரைப்படத்தில் நடித்து முடித்து இருந்தார்.பெல்ஜியம் கார் ரேஸில் அஜித் செய்த சம்பவம்.... குவியும் வாழ்த்துக்கள்! ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியிருந்த இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அந்த வகையில் சுமார் ரூ. 200 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து வெற்றிப்பாதையில் நகர்ந்து கொண்டிருக்கிறது. இதற்கிடையில் நடிகர் அஜித் குட் பேட் அக்லி படத்தை முடித்த கையோடு கார் ரேஸில் கலந்து கொள்ள சென்றார். அதன்படி கடந்த ஜனவரி மாதம் துபாயில் நடைபெற்ற 24H கார்பந்தயத்தில் தனது அணியினருடன் பங்கேற்று மூன்றாம் இடத்தை தட்டி தூக்கினார். அதைத்தொடர்ந்து இத்தாலியிலும் மூன்றாம் இடத்தை வென்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்தார். பயிற்சியின்போது மீண்டும் விபத்தில் சிக்கிய அஜித்.... அதிர்ச்சியில் ரசிகர்கள்!சிறுவயதிலிருந்தே கார் பந்தயத்தில் ஆர்வமுடைய அஜித் தொடர்ந்து அடுத்தடுத்த கார் ரேஸில் பங்கேற்று வருகிறார். அதற்காக மிக தீவிரமாக பயிற்சியிலும் ஈடுபடுகிறார். பயிற்சியின் போது சில விபத்துக்கள் ஏற்பட்டாலும் ஒரு கை பார்த்து விடலாம் என தன்னம்பிக்கையுடனும், விடாமுயற்சியுடனும் களத்தில் இறங்கினார். இந்நிலையில் பெல்ஜியம் நாட்டில் நடைபெற்ற SPA FRANCORCHAMPS பந்தயத்தில் அஜித் மற்றும் அவரது அணியினர் குறிப்பிடத்தக்க P2 PODIUM FINISH செய்து இரண்டாம் இடத்தைப் பிடித்து சாதனை படைத்திருக்கின்றனர். இதனை அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திரா தனது எக்ஸ் தள பக்கத்தில் பெருமையுடன் பதிவிட்டுள்ளார்.

அஜித் வெற்றி பெறும் ஒவ்வொரு பந்தயத்தின் போதும் போடியத்தில் நிற்கும்போது இந்திய தேசியக் கொடியை ஏந்தியவாறு தன்னுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்துவார். அதேபோல் இந்த வெற்றியையும் கொண்டாடியுள்ளார் அஜித். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

MUST READ