அஜித் – ஆதிக் ரவிச்சந்திரன் கூட்டணியில் உருவாகியுள்ள குட் பேட் அக்லி திரைப்படம் இன்று (ஏப்ரல் 10) உலகம் முழுவதும் வெளியாகிறது. மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்திருக்கிறது. ஜி.வி. பிரகாஷ் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்த படத்தில் அஜித் தன்னுடைய விண்டேஜ் தோற்றங்களில் நடித்துள்ளார். அது மட்டுமில்லாமல் இந்த படத்தில் 3 பழைய பாடல்கள் ரீமேக் செய்யப்பட்டிருக்கிறது. அடுத்தது நடிகை சிம்ரன் இந்த படத்தில் கேமியோ ரோலில் நடித்துள்ளார்.
மேலும் சில சர்ப்ரைஸ்களையும் ஆதிக் இந்த படத்தில் வைத்திருக்கிறார். இவ்வாறு மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் உருவாகி இருக்கும் இந்த படத்தை திரையில் காண ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் காத்துக் கொண்டிருந்தனர். அதன்படி இன்று கொண்டாட்டத்துடன் திரையரங்கிற்கு திரண்டு வருகின்றனர். தமிழ்நாட்டில் இப்படம் காலை 9 மணி முதல் திரையிடப்பட்டுள்ளது.
Shalini Ajith is watching #GoodBadUgly along with AK Fans at Rohini Theatre💥
— Christopher Kanagaraj (@Chrissuccess) April 10, 2025
மற்ற மாநிலங்களில் இந்த படத்தை அதிகாலையில் பார்த்து ரசித்த ரசிகர்கள் தங்களின் கருத்துக்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். இந்நிலையில் பிரபல நடிகையும், அஜித்தின் மனைவியுமான ஷாலினி தனது மகளுடன் குட் பேட் அக்லி படத்தை காண சென்னை ரோகினி திரையரங்கிற்கு வருகை தந்துள்ளார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.