Homeசெய்திகள்சினிமாபோடு வெடிய.... ரிலீஸ் தேதியை லாக் செய்த அஜித்தின் 'குட் பேட் அக்லி' படக்குழு!

போடு வெடிய…. ரிலீஸ் தேதியை லாக் செய்த அஜித்தின் ‘குட் பேட் அக்லி’ படக்குழு!

-

- Advertisement -
kadalkanni

குட் பேட் அக்லி படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.போடு வெடிய.... ரிலீஸ் தேதியை லாக் செய்த அஜித்தின் 'குட் பேட் அக்லி' படக்குழு!

அஜித் நடிப்பில் தற்போது விடாமுயற்சி எனும் திரைப்படம் உருவாகி இருக்கிறது. இந்த படம் வருகின்ற பொங்கல் தினத்தை முன்னிட்டு திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஒரு சில தவிர்க்க முடியாத காரணங்களால் இதன் ரிலீஸ் தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அதே சமயம் அஜித், மார்க் ஆண்டனி பட இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் தனது 63வது திரைப்படத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்திற்கு குட் பேட் அக்லி என்று தலைப்பு வைக்கப்பட்டிருக்கிறது. இந்த படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்க ஜி.வி. பிரகாஷ் இந்த படத்திற்கு இசை அமைக்கிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்னதாகவே இந்த படத்தின் படப்பிடிப்புகள் தொடங்கப்பட்டு விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்துள்ளது. நடிகர் அஜித்தின் படத்தின் டப்பிங் பணிகளையும் நிறைவு செய்து இருக்கிறார்.போடு வெடிய.... ரிலீஸ் தேதியை லாக் செய்த அஜித்தின் 'குட் பேட் அக்லி' படக்குழு! இந்த படத்தில் அஜித்துடன் இணைந்து திரிஷா, பிரசன்னா, அர்ஜுன் தாஸ், சுனில் மற்றும் பலர் நடித்திருக்கின்றனர். மாஸான ஆக்சன் காட்சிகள் நிறைந்த கதைக்களத்தில் உருவாகி இருக்கும் இந்த படத்தின் ரிலீஸ் தேதி தற்போது அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதன்படி இப்படம் 2025 ஏப்ரல் 10ஆம் தேதி திரைக்கு வரும் என புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டு படக்குழு அறிவித்துள்ளது. இந்த தகவல் அஜித் ரசிகர்களுக்கு கொண்டாட்டத்தை ஏற்படுத்தி உள்ளது.

ஏற்கனவே நடிகர் தனுஷின் ‘இட்லி கடை’ திரைப்படமும் ஏப்ரல் 10 அன்றுதான் திரைக்கு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ