Homeசெய்திகள்சினிமாஅஜித்தின் லேட்டஸ்ட் செல்ஃபி வீடியோ இணையத்தில் வைரல்!

அஜித்தின் லேட்டஸ்ட் செல்ஃபி வீடியோ இணையத்தில் வைரல்!

-

- Advertisement -

நடிகர் அஜித்தின் லேட்டஸ்ட் செல்ஃபி வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.அஜித்தின் லேட்டஸ்ட் செல்ஃபி வீடியோ இணையத்தில் வைரல்!

நடிகர் அஜித் கடைசியாக துணிவு திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. அதைத் தொடர்ந்து அஜித் விடாமுயற்சி திரைப்படத்தில் நடித்து வந்தார். இந்த படத்தின் படப்பிடிப்பு ஏறத்தாழ நிறைவடைந்துள்ளதாக சொல்லப்படுகிறது. மேலும் படமானது அடுத்த ஆண்டு பொங்கல் தினத்தை முன்னிட்டு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேசமயம் இவரின் நடிப்பில் உருவாகி வரும் குட் பேட் அக்லி திரைப்படமும் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளிவரும் என பட குழுவினர் வெளியிடும் ஒவ்வொரு போஸ்டர்களிலும் குறிப்பிட்டு வருகின்றனர். இருப்பினும் எந்த படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வரும் என்பது இனிவரும் நாட்களில் தெரியவரும் என்று நம்பப்படுகிறது. இதற்கிடையில் நடிகர் அஜித் ஷூட்டிங் இல்லாத சமயங்களில் நண்பர்களுடன் ஜாலியாக பைக், காரில் சுற்றுலா சென்று வருவார். அதேபோல் சமீபத்தில் அஜித் கார் ரேஸிங் அணியை தொடங்கி இருப்பதாகவும் அறிவிப்பு வெளியானது. அது மட்டும் இல்லாமல் குட் பேட் அக்லி படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட அஜித்தின் புகைப்படங்களும் இணையத்தில் செம வைரலாகி வந்தன.

இந்நிலையில் அஜித்தின் செல்ஃபி வீடியோ ஒன்றும் சமூக வலைதளங்களில் ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. அதாவது நடிகர் அஜித்தின் குட் பேட் அக்லி படத்தின் படப்பிடிப்பு தற்போது ஸ்பெயின் நாட்டில் நடைபெற்று வருகிறது. அங்கு கால்பந்து போட்டி ஒன்றை காண சென்றபோது நடிகர் அஜித் செல்ஃபி வீடியோ எடுத்துள்ளார். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

MUST READ